அம்மம்மா... முடியலைம்மா

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை : மதுரை புது நத்தம் ரோடு ஆத்திக்குளம் சந்திப்பில் உணவகம் முன்பு மெயின் ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்களை நிறுத்தி போக்குவரத்துக்கு பெரும் இடையூறு செய்கின்றனர்.ஆத்திக்குளம் சந்திப்பில் நடிகரின் உணவகம் உட்பட பல கடைகளுக்கும் வருவோர் ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்களை நிறுத்துகின்றனர். பறக்கும் பாலம் கட்டியதால் சென்டர் மீடியன் அமைந்ததும் ரோடு குறுகிவிட்டது.
அம்மம்மா... முடியலைம்மா


மதுரை : மதுரை புது நத்தம் ரோடு ஆத்திக்குளம் சந்திப்பில் உணவகம் முன்பு மெயின் ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்களை நிறுத்தி போக்குவரத்துக்கு பெரும் இடையூறு செய்கின்றனர்.



ஆத்திக்குளம் சந்திப்பில் நடிகரின் உணவகம் உட்பட பல கடைகளுக்கும் வருவோர் ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்களை நிறுத்துகின்றனர்.

பறக்கும் பாலம் கட்டியதால் சென்டர் மீடியன் அமைந்ததும் ரோடு குறுகிவிட்டது. இதனால் அந்த ரோட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. ஏற்கனவே மதுரையில் அம்மா உணவகங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. இது அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் நடிகரின் புதிய உணவகம் துவங்கியது மூலமும் தொடர்கிறது.

சேவை கட்டணத்தில் உணவு தருகிறோம், அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சரும், நடிகரும் பேசினர். சமூகத்தின் மீது இத்தனை அக்கறை கொண்டுள்ள நடிகர், தன் உணவகம் வரும் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்வது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.

ஆத்திக்குளம் தவிர தெப்பக்குளம், ஊமச்சிக்குளம் போன்ற இடங்களிலும் இவரது உணவகம் உட்பட பல கடைகளின் முன்பு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கொஞ்சம் கவனித்து நடவடிக்கை எடுப்பது நல்லது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202209:15:22 IST Report Abuse
அப்புசாமி டூ வீலர் பார்க்கிங் வசதி இல்லாம என்ன சாலைடா போடுறீங்க? எதுக்குடா கண்டா மேனிக்கி டீக்கடை, பூக்கடை போட அனுமதிக்கிறீங்க?வாகன ஓட்டிகள் எதுக்குடா கண்ட இடத்துலெ பார்க் பண்ணுறீங்க? கண்டவனுக்கு கவாசாக்கி, ஹோண்டா, டி.வி.எஸ், சுசுக்கின்னு விக்க வேண்டியது. அப்புறம் பார்க்கிங் இடமில்லேன்னு கத்த வேண்டியது. முதலில் இந்த நிறுவனங்களிடமிருந்து அபராதம் வசூலிங்க. கார், வேன்களுக்கும் இதேதான். ஒரு வருஷத்துக்கு வாகன் உற்பத்தியை நிப்பாட்டுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X