திரவுபதி முர்முவுக்கு அகாலிதளம் ஆதரவு

Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சண்டிகர் : ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தர அகாலிதளம் முடிவு செய்துள்ளது.ஜனாதிபதி தேர்தல், வரும் ௧௮ல் நடக்கிறது. இதில் தே.ஜ., கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். தே.ஜ., கூட்டணியிலிருந்து விலகிய பஞ்சாபை சேர்ந்த
திரவுபதி முர்முவுக்கு அகாலிதளம் ஆதரவு

சண்டிகர் : ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தர அகாலிதளம் முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல், வரும் ௧௮ல் நடக்கிறது. இதில் தே.ஜ., கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். தே.ஜ., கூட்டணியிலிருந்து விலகிய பஞ்சாபை சேர்ந்த சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலை, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தொடர்பு கொண்டு, ஜனாதிபதி தேர்தலில் முர்முவுக்கு ஆதரவு தர கேட்டுகொண்டார்.

இந்நிலையில், சண்டிகரில் சுக்பீர் சிங் பாதல் நேற்று கூறியதாவது: வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது, சீக்கியர்களை சிறையில் அடைத்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், பா.ஜ.,வுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது. எனினும், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளோம். சீக்கியர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
02-ஜூலை-202211:03:31 IST Report Abuse
raja அப்புறம் என்ன யஷ்வந்சிங்ஹாவுக்கு படுதோல்வியை பரிசாக கொடுத்துவிட்டது திருட்டு திமுக உள்ளடக்கிய எதிர்க்கட்சி கூட்டணி.....
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
02-ஜூலை-202207:01:46 IST Report Abuse
GANESUN அகாலி தளம்: "சீக்கியர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை " தீயமுக:: 'இழதமிர்களின் படுகொலைக்கு உதவிய காங்கிரஸ்ஸுக்கு ஆதரவு தருவோம்.. ஏன் என்றால் எங்க குடும்ப கல்லா ரொம்பியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X