கோவை - மதுரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தேவை: 190 சங்கங்கள், 20 ஊராட்சிகள் கோரிக்கை| Dinamalar

கோவை - மதுரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தேவை: 190 சங்கங்கள், 20 ஊராட்சிகள் கோரிக்கை

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (5) | |
திருச்செந்துார் ரயிலை கோவையில் இருந்து இயக்குவதுடன், பழநி வழியாக கோவை - மதுரை இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டுமென்று, தெற்கு ரயில்வேக்கு 190 சங்கங்கள் மற்றும் 20 கிராம ஊராட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.பல ஆண்டுகளுக்கு முன்பே, கோவையிலிருந்து மதுரை வழியாக ராமேஸ்வரம், திருச்செந்துார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருச்செந்துார் ரயிலை கோவையில் இருந்து இயக்குவதுடன், பழநி வழியாக கோவை - மதுரை இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டுமென்று, தெற்கு ரயில்வேக்கு 190 சங்கங்கள் மற்றும் 20 கிராம ஊராட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.latest tamil news
பல ஆண்டுகளுக்கு முன்பே, கோவையிலிருந்து மதுரை வழியாக ராமேஸ்வரம், திருச்செந்துார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அகல ரயில் பாதை அமைப்பதற்காக நிறுத்தப்பட்ட இந்த ரயில்கள், அது அமைக்கப்பட்ட பின்னும் மீண்டும் இயக்கப்படவே இல்லை. அதே போல, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களும் மறுபடியும் இயக்கப்படாமலிருப்பதால், மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

கோவையிலிருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு, மீண்டும் ரயில்களை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தொழில் மற்றும் வர்த்தக சபை கோவை கிளை இதற்காக எடுத்த முயற்சிக்கு, கோவையிலுள்ள 190 தொழில், வணிக, சமூக அமைப்புகள், ஆதரவு தெரிவித்தன. அதேபோன்று, 20 கிராம ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதே கோரிக்கை மனுவை, மதுரை டி.ஆர்.எம்., அனந்திடம் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஜெயராஜ், சண்முகசுந்தரம் சமர்ப்பித்தனர்.


latest tamil news

டி.ஆர்.எம்., உறுதி


மனுவில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகள்:திருச்செந்தூர் ரயிலை பாலக்காட்டிலிருந்து இயக்குவதற்குப் பதிலாக, பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு, கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு மாற்றி இயக்க வேண்டும். பழநி வழியாக, மதுரை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை, பழநி வழியாக கோவைக்கு இயக்கப்பட்டு வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க எக்ஸ்பிரஸ் ரயிலை, இரவு நேர ரயிலாக மீண்டும் இயக்க துரித நடவடிக்கை தேவை. கோவையிலிருந்து பழநி வழியாக திண்டுக்கல்லுக்கு பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும். திருநெல்வேலியில் இருந்து தென்காசி, மதுரை, கோவை வழியாக மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவையை கூடுதல் நாட்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகள் குறித்து, தெற்கு ரயில்வே மூலமாக ரயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்தப்படுமென்று, மதுரை டி.ஆர்.எம்., உறுதியளித்துள்ளதாக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
-நமது சிறப்பு நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X