இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: போலி பட்டா தயாரித்த 5 பேர் கைது| Dinamalar

இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: போலி பட்டா தயாரித்த 5 பேர் கைது

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | |
இந்திய நிகழ்வுகள் மணிப்பூர் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு இம்பால்-மணிப்பூர் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது; 23 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனி மாவட்டத்தில், ரயில்வே 'யார்டு' அமைக்கும் பணி நடக்கிறது. இதன் அருகில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது.
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்latest tamil newsமணிப்பூர் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு


இம்பால்-மணிப்பூர் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது; 23 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனி மாவட்டத்தில், ரயில்வே 'யார்டு' அமைக்கும் பணி நடக்கிறது. இதன் அருகில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன் தினம் பெய்த கனமழையால், பணி நடக்கும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.இதில் சிக்கி இறந்த ராணுவ வீரர்கள் மற்றும் தொழிலாளர்களின் 20 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.மேலும் 55 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. நேற்று வரை 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை, அசாம் ரைபிள்ஸ் படை ஆகியவற்றுடன் ராணுவ வீரர்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பைரேன் சிங் அறிவித்துள்ளார்.


latest tamil news

உதய்பூர் டெய்லர் படுகொலை: சதிதிட்டம் தீட்டிய இருவர் கைது உதய்பூர்-ராஜஸ்தானில், டெய்லர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சதி திட்டம்

தீட்டியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, உதய்பூரைச் சேர்ந்த டெய்லரான கன்னையா லால், ௨௮ம் தேதி பட்டப்பகலில் இரண்டு பேரால் கழுத்து துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

'வீடியோ'

கொலையாளிகள் கொலை செய்வதை, 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். முஸ்லிம் மதம் குறித்து, பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதால், கன்னையா லாலை கொன்றதாக வீடியோவில் கொலையாளிகள் கூறியுள்ளனர்.மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்தப் படுகொலை, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பயங்கரவாத சம்பவமாக அறிவித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.இந்தக் கொலையில் ஈடுபட்ட ரியாஸ் அக்தாரி மற்றும் கவுஸ் முகமது ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். மேலும், மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மாற்றம்

இந்நிலையில் 'ரியாஸ் அக்தாரிக்கு, ஐ.எஸ்., மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது; இந்த சம்பவத்தில், சர்வதேச பயங்கரவாத அமைப்பு மற்றும் மற்ற நாடுகளின் தலையீடும் உள்ளது' என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கன்னையா லால் படுகொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக, போலீசார் இரண்டு பேரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, கன்னையா லால் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து, ராஜஸ்தானில் காவல் துறையில் பெரும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. உதய்பூர் மாவட்ட ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., உட்பட ௩௨ ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து, ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழக நிகழ்வுகள்
போலி பட்டா தயாரிப்பு; 5 பேர் மீது வழக்குபோடி : போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜாமணி. இவர் தனக்கு சொந்தமான 527 சதுரடி உள்ள வீட்டை இவரது மகன்கள் உதயகுமார் 55. கணேசன் 50. இருவருக்கும் உயில் எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில் உதயகுமாரின் தம்பி கணேசன், இவரது மனைவி வாணி, உறவினர்கள் சன்னாசி, வாசகர், மணிகண்டன் ஆகிய 5 பேரும் சேர்ந்து 6 மாதங்களுக்கு முன்பு உதயகுமார் பங்குக்குரிய வீட்டை அபகரிக்கும் எண்ணத்தில் கணேசனின் பெயரில் போலி பட்டா தயார் செய்து, போலியாக வி.ஏ.ஓ., கையெழுத்து, சீல் வைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளை ஏமாற்றி பத்திரம் பதிவு செய்துள்ளனர்.உதயகுமார் புகாரில் கணேசன், வாணி உட்பட 5 பேர் மீது தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


கொலை வழக்கு; 3 பேர் சரண்மதுரை : திருமங்கலம் சக்திவேல். இவர் முன்விரோதத்தில் சிலரால் மேலக்காலில் கொலை செய்யப்பட்டார்.காடுபட்டி போலீசார் வழக்குப் பதிந்தனர். திருமங்கலம் ரமேஷ் பாபு 28, சுகுமார் 29, ஆனையூர் அலெக்ஸ் குமார்28, மதுரை நீதித்துறைநடுவர் (ஜே.எம்.,6) நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி சந்தானகுமார் உத்தரவிட்டார்.


தற்காலிக ஊழியர் தீக்குளிக்க முயற்சிகாஞ்சிபுரம்-மாநகராட்சி தற்காலிக ஊழியர், ஐந்து மாத ஊதியம் கேட்டு, தீக்குளிக்க முயன்றதால், காஞ்சியில் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள், 45; மாநகராட்சி தற்காலிக பணியாளர். இவருக்கு, ஐந்து மாதங்களாக ஊதியம் வரவில்லை என கூறப்படுகிறது.நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என, நேற்று பகல் 11:00 மணி அளவில் மண்ணெண்ணெய் கேனுடன் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன், தீ குளிக்க முயன்றார். அருகில் இருந்தவர்கள், தடுத்து நிறுத்தினர்.தகவல் அறிந்த மாநகராட்சி பணியாளர்கள் சம்பளத்தை கொடுத்து விடுவதாக உறுதியளித்த பின், வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.


பிராட்வேயில் 3000 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்பிராட்வே--பிராட்வேயில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை, மாநகராட்சியினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில், ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தெர்மாகோல் தட்டுகள், குவளைகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது.இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, பாக்கு மர மட்டை, அலுமினிய தாள், மக்கும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 12 வகையான பொருட்களையும் பரிந்துரை செய்துள்ளது.இவற்றை மீறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தாலோ அபராதம் விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் நடைபாதை கடைகளுக்கு 100 ரூபாயும்; மளிகை, மருந்து கடைகள் மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு 1,000 ரூபாயும்; வணிக வளாகங்கள், துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், ராயபுரம் மண்டல நல அலுவலர் வேல்முருகன் தலைமையில், பகுதி சுகாதார அலுவலர் மாப்பிள்ளை துரை, சுகாதார ஆய்வாளர்கள் கவுசிக், இஸ்மாயில் ஆகியோர் கொண்ட சுகாதார ஆய்வாளர் குழுவினர், பிராட்வே, மலையப்பன் தெருவிலுள்ள குடோனில், நேற்று ஆய்வு நடத்தினர்.அங்கு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3,000 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.இதையடுத்து, அங்கிருந்த ௩ லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3,000 கிலோ பிளாஸ்டிக் தட்டுகள், குவளைகள், பைகள் உள்ளிட்ட வற்றை, மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம்விதித்தனர்.


கஞ்சா விற்பனை: ஒருவர் கைதுபெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஐ., ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் இடிகரை சுடுகாடு அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான நிலையில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது, அவரிடம், 1200 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த, 7,500 ரூபாய் ரொக்கம் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.

பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பலி

வால்பாறை:வால்பாறை அருகே, பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்ததில், கேரளாவை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் இறந்தார்.கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த மூன்று பேர், ஜீப்பில் பொள்ளாச்சிக்கு வந்தனர். அதன்பின், வால்பாறை வழியாக சாலக்குடி செல்ல, பழைய வால்பாறை வழியாக சென்ற போது, எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடும் போது, எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கட்டட ஒப்பந்ததாரர் சந்தோஷ்குமார், 45, தலையில் படுகாயமடைந்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.ஜீப்பை ஓட்டிய டிரைவர் சந்தோஷ்குமார், 46, மனேஜ், 42, ஆகியோரும் காயமடைந்தனர். விபத்து குறித்து, வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X