உள்ளாட்சி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வினர் அதிருப்தி

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில், அ.தி.மு.க., போட்டியிடாத நிலை ஏற்பட்டுள்ளதை கண்டு, அக்கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 510 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 34 பதவிகளுக்கு, கட்சி அடிப்படையில்
ADMK, OPS, EPS, election, இரட்டை இலை, அதிமுக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில், அ.தி.மு.க., போட்டியிடாத நிலை ஏற்பட்டுள்ளதை கண்டு, அக்கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 510 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 34 பதவிகளுக்கு, கட்சி அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்பட்டு, தேர்தல் நடைபெறவுள்ளது.


latest tamil news


அ.தி.மு.க.,வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரத்தால், கட்சி வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போய் விட்டது. இந்த நிலையில் தஞ்சாவூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில், அ.தி.மு.க., போட்டியிடாமல் தேர்தலை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் வெற்றி கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தும். அந்த வகையில் இடைத்தேர்தலில், 34 பதவிகளில் 20 இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்றிருந்தால், உள்ளூர் தி.மு.க.,வினரை எதிர்த்து, அரசியல் செய்வதற்கு வசதியாக இருந்திருக்கும். ஆனால், தற்போது தி.மு.க.,வின் நுாறு சதவீதம் வெற்றிக்கு, அ.தி.மு.க., தாரை வார்த்து கொடுத்து விட்டது என, அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatapathy - New Delhi,இந்தியா
02-ஜூலை-202212:58:55 IST Report Abuse
venkatapathy OPS இன் கோர்ட் நடவடிக்கைகள்தான் காரணம் இத்தகைய நிலைக்கு .
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
02-ஜூலை-202210:36:54 IST Report Abuse
ramesh கட்சி பற்றி இருவருக்கும் எந்த கவலையும் இல்லை .யார் தலைவர் என்பது மட்டுமே கவலை மற்றும் போட்டி .
Rate this:
Cancel
Balasubramanyan - Chennai,இந்தியா
02-ஜூலை-202210:31:03 IST Report Abuse
Balasubramanyan edappadi Anna pl. note the the comments of your cadres. because of you two and others unnecessary comments in public betrayed your cadres. But you all enjoy MLA and MP posts and get pensionlifetime.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X