புதுச்சேரியில் ஜி.எஸ்.டி., தின விழா கொண்டாட்டம்: அதிக வரி செலுத்திய நிறுவனங்களுக்கு விருது

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
புதுச்சேரி : ஜி.எஸ்.டி., தின விழாவில் அதிக வரி கட்டிய நிறுவனங்கள், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அதிகாரிகள் கவுரவிக்கப்பட்டனர்.ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் புதுச்சேரி ஆணையர் அலுவலகம் சார்பில், 5வது ஜி.எஸ்.டி., தினம் ஓட்டல் ஜெயராமில் நேற்று கொண்டாடப்பட்டது.புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையக ஆணையர் பத்மஸ்ரீ வரவேற்று, ஜி.எஸ்.டி., வரி வருவாய்

புதுச்சேரி : ஜி.எஸ்.டி., தின விழாவில் அதிக வரி கட்டிய நிறுவனங்கள், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அதிகாரிகள் கவுரவிக்கப்பட்டனர்.ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் புதுச்சேரி ஆணையர் அலுவலகம் சார்பில், 5வது ஜி.எஸ்.டி., தினம் ஓட்டல் ஜெயராமில் நேற்று கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையக ஆணையர் பத்மஸ்ரீ வரவேற்று, ஜி.எஸ்.டி., வரி வருவாய் குறித்து பேசினார்.பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், புதுச்சேரி பல்கலைக்கழக ஆய்வுத் துறை இயக்குனர் தரணிக்கரசு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.விழாவில், அதிக ஜி.எஸ்.டி., வரி செலுத்திய நிறுவனங்கள் கவுரவிக்கப்பட்டன.

சரக்கு பிரிவில் லெனோவா இந்திய நிறுவனம், சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனத்திற்கும், சேவைகள் பிரிவில் எஸ்.பி.ஐ., டெக்னாலஜிஸ் இந்தியா, பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் நியூ இந்தியா அசோசியேட்ஸ், ஜி.எஸ்.டி., காம்போசிஷன் பிரிவில் பஞ்சாபி தாபா, ஏற்றுமதி பிரிவில் ஸ்ட்ரைட்ஸ் பார்மா சயின்ஸ் நிறுவனங்களுக்கு விருதுகளை, அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்.விழாவில், அர்ப்பணிப்புடன் துறையில் சேவையாற்றிய புதுச்சேரி ஆணையக சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவில் புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையக ஆணையர் பத்மஸ்ரீ பேசியதாவது:புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையகம், கடந்த 2021-22ம் ஆண்டு 601.16 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்த 2020-21 நிதியாண்டை ஒப்பிடும்போது 63.30 கோடி ரூபாய் அதிகம்.நடப்பு காலாண்டில் ஜூன் மாதம் வரை 192.04 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டியுள்ளது. இதே மாதம் வரை, கடந்தாண்டு 55.64 கோடி ரூபாய் மட்டுமே வரி வருவாய் எட்டப்பட்டு இருந்தது. எனவே கடந்தாண்டை ஒப்பிடும்போது 40.80 சதவீதம் அதிகம். வரி செலுத்துவோரின் பங்களிப்பினால் தேசிய அளவில் இச்சாதனையை எட்ட முடிந்தது. வரி செலுத் தும் முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. வரி செலுத்துவதற்கு எளிதான ஆலோசனைகளை வரவேற்கிறோம், நிறுவனங்கள், பொதுமக்கள் காலத்தோடு முறை யாக வரி செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இணை ஆணையர் சதீஷ்குமார் உள் பட பலர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X