மேலும் ஒரு 'அறிவுஜீவி' வேலை; ஜீப்புடன் சாலை அமைத்து 'கூத்து'

Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
வேலுார் : வேலுார் மாநகராட்சி பகுதியில், மேலும் ஒரு வாகனம் மீது சாலை அமைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அதையடுத்து, எங்கு வாகனங்கள் மீது சாலை போடப்பட்டுள்ளது என அறிக்கை அளிக்க, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.முதல்வர் ஸ்டாலின், வேலுார் வந்ததையொட்டி, கடந்த, 27 இரவோடு இரவாக வேலுாரில் பல இடங்களில் சாலை போட்டுள்ளனர்.அதில், மெயின் பஜார் அருகே காளிகாம்பாள் கோயில் தெருவில், சிவா
jeep,road,vellore

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வேலுார் : வேலுார் மாநகராட்சி பகுதியில், மேலும் ஒரு வாகனம் மீது சாலை அமைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அதையடுத்து, எங்கு வாகனங்கள் மீது சாலை போடப்பட்டுள்ளது என அறிக்கை அளிக்க, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், வேலுார் வந்ததையொட்டி, கடந்த, 27 இரவோடு இரவாக வேலுாரில் பல இடங்களில் சாலை போட்டுள்ளனர்.அதில், மெயின் பஜார் அருகே காளிகாம்பாள் கோயில் தெருவில், சிவா என்பவர் கடை முன் நிறுத்தியிருந்த பைக்குடன் சிமென்ட் சாலை போடப்பட்டது. இதனால், 2 மணி நேரம் போராடி, சிமென்ட் கலவையை உடைத்து பைக்கை எடுத்தனர்.

இதையடுத்து, அந்த வினோத சாலை அமைத்த குமார் என்பவர் ஒப்பந்தத்தை, மாநகராட்சி அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.அதுபோல, பொன்னியம்மன் கோயில் தெருவில், ஒரு மாதத்திற்கு முன், பழுதடைந்த அரசு ஜீப் மீது தார் சாலை போடப்பட்ட தகவல் நேற்று தெரிந்தது.மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், அப்பகுதியில் ஆய்வு செய்தார். கிரேன் மூலம் ஜீப் அப்புறப்படுத்தப்பட்டு, மீண்டும் தார் சாலை போடப்பட்டது.


latest tamil newsஎனவே, வேலுார் மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளில் எங்கு வாகனங்கள் மீது சாலை போடப்பட்டுள்ளது என ஆய்வு செய்து, 24 மணி நேரத்தில் அறிக்கை அனுப்ப, அந்தந்த மண்டல பொறியாளர்களுக்கு, கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?

உள்ளாட்சிகளில் எந்த ஒரு பணியையும் கண்காணிக்க, வார்டு, மண்டல அளவில் பொறியாளர்கள் உள்ளனர். இவர்கள் பணி நடக்கும் போது, நிகழ்விடத்தில் இருந்து கண்காணிக்க வேண்டும். பணி முடிந்த பின், அதன் தரத்தை ஆய்வு செய்து, உறுதி செய்த பின்னரே, பணப் பட்டுவாடா நடைபெறும். குறிப்பாக, சாலை பணிகள் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட பொறியாளர், நிகழ்விடத்தில் இருந்து பணியை கண்காணிக்க வேண்டும். அப்படி இருக்கையில், பொன்னியம்மன் கோவில் தெருவில், ஒரு மாதத்திற்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டு, ஜீப்புடன் சேர்த்து சாலை அமைத்துள்ளனர். காளிகாம்பாள் கோவில் தெருவில், பைக்குடன் சேர்த்து சிமென்ட் சாலை அமைத்துள்ளனர். இந்த ஒப்பந்ததாரர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ள மாநகராட்சி நிர்வாகம், பணியை கண்காணிக்க தவறிய பொறியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yogeshananda - Erode,இந்தியா
02-ஜூலை-202217:53:07 IST Report Abuse
Yogeshananda திராவிட மாடல் ஆட்சி என்றால் இது தான்
Rate this:
Ram - ,
02-ஜூலை-202220:02:54 IST Report Abuse
RamDravida model :))...
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
02-ஜூலை-202216:18:07 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அரசின் முழு மூச்சான மக்கள் பனி என்பது இது தானோ ...அவனோட பொருளையும் சேர்த்து அரசுடமை ஆக்குவது திராவிட மாடல்
Rate this:
Cancel
Sharvintej - மதுரை ,இந்தியா
02-ஜூலை-202216:15:02 IST Report Abuse
Sharvintej இதுவும் திராவிட மாடல் ஆட்சியோ ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X