தமிழ் கலாசாரத்தை பாதுகாக்க மதமாற்ற தடை சட்டம் அவசியம்! சொல்கிறார் வேதாந்தம்

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
ராமேஸ்வரம் : ''தமிழர் கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்க, முதல்வர் ஸ்டாலின் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும்,'' என, ராமேஸ்வரத்தில் தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் நிறுவன தலைவர் வேதாந்தம் தெரிவித்தார்.நேற்று அவர் கூறியதாவது: ஜாதி பார்க்காமல் அனைத்து கிராம கோவில் பூஜாரிகளுக்கும், 15 நாட்கள் தமிழ், சமஸ்கிருத மந்திரத்தில் பூஜை செய்ய பயிற்சி அளித்து, பூணுால்
VHP, Vedantam, மதமாற்ற தடை சட்டம், வேதாந்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராமேஸ்வரம் : ''தமிழர் கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்க, முதல்வர் ஸ்டாலின் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும்,'' என, ராமேஸ்வரத்தில் தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் நிறுவன தலைவர் வேதாந்தம் தெரிவித்தார்.

நேற்று அவர் கூறியதாவது: ஜாதி பார்க்காமல் அனைத்து கிராம கோவில் பூஜாரிகளுக்கும், 15 நாட்கள் தமிழ், சமஸ்கிருத மந்திரத்தில் பூஜை செய்ய பயிற்சி அளித்து, பூணுால் அணிவிக்கப்படுகிறது. இதன் பின், இவர்களுக்கு கோவில்களில் பூஜை, அபிஷேகம் செய்ய முழுத்தகுதி உண்டு.

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கிராம கோவில் பூஜாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை, 2,000 ரூபாய் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வழங்காததால் முதல்வரை சந்தித்து முறையிட உள்ளோம்.தமிழ் கலாசாரம், பண்பாடு பாதுகாக்கும் மக்களுக்கு, முதல்வர் உறுதுணையாக நிற்க வேண்டும். பிற மதத்தினர் தங்களை தமிழர் என கூறுவதில்லை.

வங்கதேசம், காஷ்மீரில் இருந்து ஊடுருவும் மக்களை தடுக்க குடியுரிமை சட்டம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில்களில் ஆகம விதி தெரியாத அதிகாரிகள் உள்ளதால், பூஜை, அபிஷேக முறைகள் தெரிவதில்லை. ஆகம விதிகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.


latest tamil news



மேற்கு வங்க முதல்வர் மம்தா, அங்குள்ள உலமாக்களுக்கு மாதம், 20 ஆயிரம் ரூபாய் வழங்குகிறார். தமிழகத்தில் கோவில் பூஜாரிகளுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும்.உதய்பூர் படுகொலை சம்பவம் காட்டு மிராண்டித்தனமானது. கொலையாளிகள் மற்றும் பின்னணியில் உள்ளவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இது, ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்து விடும்.இவ்வாறு அவர் கூறினார். உடன், இணை பொதுச்செயலர் ராமசுப்பு, மண்டல அமைப்பாளர் சரவணன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
03-ஜூலை-202219:37:41 IST Report Abuse
Palanisamy T பிரமதத்தினார்கள் இந்து மதம் மாறிவர அவதியுறுகின்றார்களா அடையாளம் காட்டமுடியுமா, பட்டியல்போடமுடியுமா நாம் சும்மா வாய்க்கு வந்த படி பேசக்கூடாது.நீங்கள் கேட்க்காமலே உங்களின் ஆசையும் நிறைவேறிவிட்டது. திமுக ஆட்சிசெய்யும் வரை இந்த சட்டம் வராது. அவர்களின் சின்னமே சூரியன் தான். கிழக்கே தோன்றும் சூரியன் ஒருவேளை என்றாவதொருநாள் மேற்க்கே தோன்றினாலும் தோன்றலாம். இந்த பகுத்தறிவு சென்மங்கள் இனிமேலும் மாறப் போவதில்லை. இவர்களின் பகுத்தறிவு கொள்கையில் ஊழல்கள் செய்யலாம். சாராயக் கடைகள் நடத்தலாம். மற்ற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லலாம். ஆனால் தீபாவளிக்குமட்டுமில்லை. என்னே பகுத்தறிவு நினைத்தாலே நெஞ்சம் இனிக்கின்றது.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
02-ஜூலை-202220:26:17 IST Report Abuse
Sai இந்த சட்டம் கொண்டு வந்தால் பிற மதத்தினரெல்லாம் இந்து மதத்துக்கு மாறி வர முடியாமல் அவதியுறுவார்களே யோசிக்க வேண்டாமா?
Rate this:
Cancel
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
02-ஜூலை-202219:05:24 IST Report Abuse
Velumani K. Sundaram 2000 ஆண்டுகளுக்கு பிறகு ஓர் இந்தியன் இந்தியாவை ஆளும்போதுதான், இந்து அறநிலை எப்படியெல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணரமுடிகிறது. தமிழகத்தை ஒரு தமிழன் ஆண்டால்தான் தமிழ் கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என்பதை அனைவரும் உணர்ந்து ஒட்டுமொத்த தமிழரும் தேர்தலில் பங்கெடுத்து வாக்களிக்கவேண்டும். வாக்களிக்காத "walk ஆல ஓலிகள்" இருக்கும்வரை தமிழ்கலாச்சாரத்திற்கு அழிவுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X