தமிழ் கலாசாரத்தை பாதுகாக்க மதமாற்ற தடை சட்டம் அவசியம்! சொல்கிறார் வேதாந்தம்| Dinamalar

தமிழ் கலாசாரத்தை பாதுகாக்க மதமாற்ற தடை சட்டம் அவசியம்! சொல்கிறார் வேதாந்தம்

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (22) | |
ராமேஸ்வரம் : ''தமிழர் கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்க, முதல்வர் ஸ்டாலின் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும்,'' என, ராமேஸ்வரத்தில் தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் நிறுவன தலைவர் வேதாந்தம் தெரிவித்தார்.நேற்று அவர் கூறியதாவது: ஜாதி பார்க்காமல் அனைத்து கிராம கோவில் பூஜாரிகளுக்கும், 15 நாட்கள் தமிழ், சமஸ்கிருத மந்திரத்தில் பூஜை செய்ய பயிற்சி அளித்து, பூணுால்
VHP, Vedantam, மதமாற்ற தடை சட்டம், வேதாந்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராமேஸ்வரம் : ''தமிழர் கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்க, முதல்வர் ஸ்டாலின் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும்,'' என, ராமேஸ்வரத்தில் தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் நிறுவன தலைவர் வேதாந்தம் தெரிவித்தார்.

நேற்று அவர் கூறியதாவது: ஜாதி பார்க்காமல் அனைத்து கிராம கோவில் பூஜாரிகளுக்கும், 15 நாட்கள் தமிழ், சமஸ்கிருத மந்திரத்தில் பூஜை செய்ய பயிற்சி அளித்து, பூணுால் அணிவிக்கப்படுகிறது. இதன் பின், இவர்களுக்கு கோவில்களில் பூஜை, அபிஷேகம் செய்ய முழுத்தகுதி உண்டு.

தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கிராம கோவில் பூஜாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை, 2,000 ரூபாய் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வழங்காததால் முதல்வரை சந்தித்து முறையிட உள்ளோம்.தமிழ் கலாசாரம், பண்பாடு பாதுகாக்கும் மக்களுக்கு, முதல்வர் உறுதுணையாக நிற்க வேண்டும். பிற மதத்தினர் தங்களை தமிழர் என கூறுவதில்லை.

வங்கதேசம், காஷ்மீரில் இருந்து ஊடுருவும் மக்களை தடுக்க குடியுரிமை சட்டம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில்களில் ஆகம விதி தெரியாத அதிகாரிகள் உள்ளதால், பூஜை, அபிஷேக முறைகள் தெரிவதில்லை. ஆகம விதிகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.


latest tamil newsமேற்கு வங்க முதல்வர் மம்தா, அங்குள்ள உலமாக்களுக்கு மாதம், 20 ஆயிரம் ரூபாய் வழங்குகிறார். தமிழகத்தில் கோவில் பூஜாரிகளுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும்.உதய்பூர் படுகொலை சம்பவம் காட்டு மிராண்டித்தனமானது. கொலையாளிகள் மற்றும் பின்னணியில் உள்ளவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இது, ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்து விடும்.இவ்வாறு அவர் கூறினார். உடன், இணை பொதுச்செயலர் ராமசுப்பு, மண்டல அமைப்பாளர் சரவணன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X