எம்.பி., பதவியில் இருந்து திருமாவளவனை நீக்க வேண்டும்| Dinamalar

'எம்.பி., பதவியில் இருந்து திருமாவளவனை நீக்க வேண்டும்'

Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (35) | |
ஸ்ரீவில்லிபுத்தூர்: ''ஹிந்து பெண்களை அவதூறாக பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை எம்.பி., பதவியில் இருந்து நீக்க வேண்டும்,'' என, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்துாரில் ஹிந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் காட்டமாக தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ராஜஸ்தான் டெய்லர்
Thirumavalavan, Viduthalai Chiruthaigal Katchi ,VCK,விடுதலை சிறுத்தைகள் கட்சி, திருமாவளன், வகாடேஸ்வர சுப்ரமணியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீவில்லிபுத்தூர்: ''ஹிந்து பெண்களை அவதூறாக பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை எம்.பி., பதவியில் இருந்து நீக்க வேண்டும்,'' என, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்துாரில் ஹிந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் காட்டமாக தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ராஜஸ்தான் டெய்லர் கொலை சம்பவத்தில் வெளிநாடுகளின் சதி உள்ளது. பயங்கரவாதிகளை அடக்க வேண்டும். தமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் உள்ளனர். இங்கு கலவரத்தை உருவாக்கவும் முயற்சி நடக்கிறது. ஹிந்து கோயில்களை அறநிலையத்துறையினர் ஆய்வு செய்யலாம். ஆனால் நிர்வகிப்பதற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். அமைச்சர் சேகர்பாபு கோயில் நிலங்களை மீட்க வேண்டும். வரிப்பாக்கிகளை வசூலிக்க வேண்டும். தமிழக அரசு ஹிந்து கோயில்களை இடித்தது தான் ஓராண்டு சாதனை என்றார். நிர்வாகிகள் பொன்னையா, யுவராஜ் உடனிருந்தனர்.


latest tamil news
இணைய வேண்டும்

தேனியில் ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கூறியதாவது: ஹிந்து மக்களின் பாதுகாப்பு உரிமை பறிக்கப்படுகிறது. அதை மீட்க ஜூன் 28 திருந்செந்துாரில் பிரசாரப்பயணம் துவங்கி ஜூலை 31ல் சென்னையில் நிறைவடையும். 500 ஆண்டுகள் பழமையான கோயில்கள் இடிக்கப்படுகின்றன. சட்டவிரோதமாக கட்டப்படும் மசூதிகளை மீது கை வைக்க தி.மு.க., அரசு தயங்குகிறது. கேரள மாநிலம் கண்ணகி கோயிலை புனரமைக்கவும், பக்தர்களுக்கான வசதிகளை செய்யவும் முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம்.

திருப்பூரில் பனியன் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரில் பல கட்டடங்களில் பங்களாதேஷ் முஸ்லிம்கள் தொழுகை நடத்துகிறார்கள். இதுதான் தி.மு.க.,வின் ஹிந்து விரோத ஆட்சி. முன்னாள் முதல்வர்கள் பன்னீர்செல்வம், பழனிசாமி இறைசிந்தனை மிக்கவர்கள். இருவரும் இணைய ஹிந்துமுன்னணி விரும்புகிறது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X