காற்றாலைகளில் 5,535 மெகாவாட் கொள்முதல்

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: காற்றாலைகளில் இருந்து முதல் முறையாக, மின் வாரியம் நேற்று முன்தினம், 5,535 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்துள்ளது.துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு நிறுவனங்கள், 8,618 மெகா வாட் திறனில், காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன. ஆண்டுதோறும் மே முதல் செப்., வரை காற்றாலை சீசன்.கடந்த 2020 ஆக.,7ல் காற்றாலைகளில் இருந்து, 5,129 மெகா வாட்
காற்றாலை,  5,535 மெகாவாட், கொள்முதல்,


சென்னை: காற்றாலைகளில் இருந்து முதல் முறையாக, மின் வாரியம் நேற்று முன்தினம், 5,535 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்துள்ளது.துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு நிறுவனங்கள், 8,618 மெகா வாட் திறனில், காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன.

ஆண்டுதோறும் மே முதல் செப்., வரை காற்றாலை சீசன்.கடந்த 2020 ஆக.,7ல் காற்றாலைகளில் இருந்து, 5,129 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. இதுவே, ஒரே நாளில் காற்றாலைகளில் இருந்து, வாரியம் கொள்முதல் செய்த அதிக அளவாக இருந்தது.


latest tamil news


நடப்பு சீசனில் காற்று நன்கு வீசுவதால், காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக, 3,000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது.காற்றாலைகளில் இருந்து எப்போதும் இல்லாத வகையில், ஜூன் 26 முதல் அதிக அளவாக, 5,239 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. அதைவிட அதிகமாக, நேற்று முன்தினம், 5,535 மெகா வாட் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்து, மின் வாரியம் சாதனை படைத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202212:25:55 IST Report Abuse
அப்புசாமி சத்தம் போட்டு சொல்லாதீர்கள். ஒன்றிய அரசுக்கு கேட்டுச்சுன்னா காற்றுக்கும் வரி போட்டுத் தாக்குவாங்க. 12 பர்சண்ட்டோ 18 பர்செண்ட்டோ...
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
02-ஜூலை-202211:10:25 IST Report Abuse
Loganathan Kuttuva இலவச மின்சாரம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X