திருமண சான்று வழங்க வி.ஏ.ஓ.,க்களுக்கு தடை

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: கோவில்களில் திருமண பதிவுக்காகவும், சமூக நலத் துறை உதவித்தொகை பெறுவதற்காகவும், கிராம நிர்வாக அலுவலர்களான வி.ஏ.ஓ.,க்கள், திருமண சான்று வழங்க கூடாது என, வருவாய்த் துறை உத்தரவிட்டுள்ளது.அறநிலையத் துறை கோவில்களில் திருமணம் செய்வோர், தங்களுக்கு இது தான் முதல் திருமணம் என்பதை உறுதி செய்ய, வி.ஏ.ஓ.,க்களிடம் இருந்து முதல் திருமண சான்று பெற்று
திருமண சான்று, வி.ஏ.ஓ., தடை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை: கோவில்களில் திருமண பதிவுக்காகவும், சமூக நலத் துறை உதவித்தொகை பெறுவதற்காகவும், கிராம நிர்வாக அலுவலர்களான வி.ஏ.ஓ.,க்கள், திருமண சான்று வழங்க கூடாது என, வருவாய்த் துறை உத்தரவிட்டுள்ளது.

அறநிலையத் துறை கோவில்களில் திருமணம் செய்வோர், தங்களுக்கு இது தான் முதல் திருமணம் என்பதை உறுதி செய்ய, வி.ஏ.ஓ.,க்களிடம் இருந்து முதல் திருமண சான்று பெற்று சமர்ப்பிக்கின்றனர்.


நிறுத்த முடிவு


சமூக நலத் துறையின் திருமண உதவித்தொகை பெறுவதற்கும், இத்தகைய சான்று பெற, பொது மக்கள், வி.ஏ.ஓ.,க்களை அணுகுகின்றனர்.இதுபோன்ற சான்றிதழ் வழங்க, எவ்வித அரசாணையும், வழிகாட்டுதல்களும் இல்லாத நிலையில், வி.ஏ.ஓ.,க்கள் கோரிக்கை அடிப்படையில் சான்றிதழ்களை வழங்குகின்றனர். இதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news

'இ - சேவை' மையங்கள்


இது தொடர்பாக, வருவாய் நிர்வாக துறை, பதிவுத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதம்:வி.ஏ.ஓ.,க்கள், திருமண சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சார் - பதிவாளர் அலுவலகங்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில் நிர்வாகங்கள், திருமண பதிவின் போது வி.ஏ.ஓ.,க்களிடம் இருந்து, முதல் திருமண சான்று பெற்று வருமாறு கேட்க வேண்டாம்.

இதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட நபர் திருமணமாகாதவர் என்பதற்கான, வருவாய்த் துறையின் சான்று இ - சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன. இதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
02-ஜூலை-202216:10:22 IST Report Abuse
Davamani Arumuga Gounder .. இந்த நடைமுறை அமல் செய்யப்பட்டு 2 மாதம் ஆகிவிட்டது.... நடந்து முடிந்த திருமணத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும்... என்பது சட்டம்.. ஆனால்... அரசின் உதவித்தொகை ஏதும் பெற விரும்பாதவர்கள்.. தங்களின் வீட்டிலோ, திருமண மண்டபங்களிலோ திருமணம் செய்து கொண்டவர்கள் .. பதிவு செய்வதற்கு செல்லும் பொழுது திருமணமாகாதவர் என்ற சான்று கட்டாயமாக உள்ளது.. திருமணம் செய்தவர்கள் பதிவு செய்வதற்காக இவ்த சான்று வேண்டி விண்ணப்பம் செய்யும் பொழுது .. 4 நாட்களுக்கு முன்பே திருமணம் நடந்து விட்டதால்.. திருமணம் ஆகாதவர் என்ற சான்றுக்கு நான் பரிந்துரை செய்ய இயலாது.. என்று கிராம நிர்வாக அலுவலர் கூறுகிறார்.. எப்படி இவர்கள் தங்களின் திருமணத்தை பதிவு செய்வது? .. மேற்படி திருமண தேதிக்கு முன்பு .. இவர் மணப்பெண்-மணமகன்.. இவர் திருமணமாகாதவர் என்ற சான்று அரசால் வழங்கப்பட வேண்டும்..
Rate this:
Cancel
Muthu rajan -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூலை-202209:55:06 IST Report Abuse
Muthu rajan Welcome move. Same way these VAO should be stripped of their power to issue pattas.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
02-ஜூலை-202216:03:20 IST Report Abuse
madhavan rajanNow also he has to verify the records and send recommendation to Tahsildar who is competent to issue patta....
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
02-ஜூலை-202209:16:40 IST Report Abuse
GMM VAO பரிந்துரைக்க முடியும். எந்த சான்றும் வழங்க அதிகாரம் இல்லை. தலைமை இட தாசில்தார் தான் வழங்கி, ஆவணம் பராமரிக்க முடியும். பதிவாளர் பதிவு செய்து பராமரிக்க முடியும். வருவாய் துறை மற்றும் பதிவு துறையில் மட்டும் அனைத்து திருமண, விவாகரத்து விவரங்கள் பராமரிக்க வேண்டும். நாளுக்கு ஒரு அரசாணை வெளியிடுதல் கூடாது. முதல் திருமணம் அல்லது விவாக ரத்து இரு பெற்றோர்கள் உறுதி செய்வது நல்லது. இதனை ஏன் அரசு, நீதிமன்றம் விரும்புவது இல்லை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X