புதுடில்லி: பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நம் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நேற்று தொலைபேசியில் பேசினார்.அப்போது, உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து புடினிடம் மோடி விளக்கினார். கடந்த 2021 டிசம்பரில் புடின் இந்தியா வந்தபோது இருநாடுகளுக்கு இடையே செய்து கொண்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும், உரம், வேளாண் பொருட்கள் மற்றும் மருந்து ஆகியவற்றின் இருநாட்டு வர்த்தகம் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.