மூத்த குடிமக்களுக்கு உடனடி பத்திரம்; பதிவுத்துறை உத்தரவு| Dinamalar

மூத்த குடிமக்களுக்கு உடனடி பத்திரம்; பதிவுத்துறை உத்தரவு

Added : ஜூலை 02, 2022 | |
சென்னை: 'சார் பதிவாளர் அலுவலகங்களில், 70 வயது மேற்பட்டோருக்கு, டோக்கன் வரிசை இன்றி, முன்னுரிமை அடிப்படையில் பத்திரப் பதிவை முடித்து, ஆவணத்தை உடனடியாக அளிக்க வேண்டும்' என, பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், சார் பதிவாளர் அலுவலகங்களில், ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான சரிபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில்,

சென்னை: 'சார் பதிவாளர் அலுவலகங்களில், 70 வயது மேற்பட்டோருக்கு, டோக்கன் வரிசை இன்றி, முன்னுரிமை அடிப்படையில் பத்திரப் பதிவை முடித்து, ஆவணத்தை உடனடியாக அளிக்க வேண்டும்' என, பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.



தமிழகத்தில், சார் பதிவாளர் அலுவலகங்களில், ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான சரிபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில், டோக்கன் எண் ஒதுக்கப்பட்டு, வரிசைப்படி பதிவு மேற்கொள்ளப்படும்.இதில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வந்தால், முன்னுரிமை அடிப்படையில் பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும்.



சில மாதங்கள் முன் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பத்திரப் பதிவுக்கு தத்கல் முறை அறிமுகமான நிலையில், மூத்த குடிமக்கள் சலுகை கேள்விக்குறியானது.இந்த பின்னணியில், சார் பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் பிறப்பித்துள்ள உத்தரவு:சார் பதிவாளர் அலுவலகங்களில், 70 வயது, அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வந்தால் முன்னுரிமை அடிப்படையில் பத்திரப்பதிவு மேற்கொள்வதுடன், பத்திரத்தையும் உடனடியாக வழங்க வேண்டும்.பத்திரப் பதிவுக்கான டோக்கன் எண் பெற விண்ணப்பித்தால், அதில் முன்னுரிமை விபரம் சேர்க்க, கணினி அமைப்பில் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X