குறுவை தொகுப்பில் புறக்கணிப்பு; நாகையில் விவசாயிகள் குமுறல்

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
நாகப்பட்டினம் : காவிரி நீரை மட்டுமே நம்பி குறுவை சாகுபடி மேற்கொள்ளும் நாகை மாவட்ட விவசாயிகளை, குறுவை தொகுப்பு திட்டத்தில், தமிழக அரசு புறக்கணித்துள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், குறுவை தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு
குறுவை, புறக்கணிப்பு, நாகை, விவசாயிகள்,


நாகப்பட்டினம் : காவிரி நீரை மட்டுமே நம்பி குறுவை சாகுபடி மேற்கொள்ளும் நாகை மாவட்ட விவசாயிகளை, குறுவை தொகுப்பு திட்டத்தில், தமிழக அரசு புறக்கணித்துள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், குறுவை தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.திட்டத்தின் கீழ், 1 ஏக்கருக்கு யூரியா -45 கிலோ, டி.ஏ.பி.,- 50 கிலோ, பொட்டாஷ்- 25 கிலோ போன்ற இடுபொருட்கள், 100 சதவீத மானியத்தில் வழங்க, தமிழக அரசு 47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில், நாகை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.ஆனால் நாகை, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், தலை ஞாயிறு,வேதாரண்யம் ஒன்றியங்களை உள்ளடக்கிய நாகை மாவட்டத்திற்கு, 3,000 ஆயிரம் ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



இது, காவிரி நீரை மட்டுமே நம்பி குறுவை சாகுபடியை மேற்கொண்டுள்ள, நாகை விவசாயிகள் மத்தியில் வேளாண் துறை அறிவிப்பு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் தமிழ்செல்வன் கூறியதாவது:குறுவை தொகுப்பை பெற விவசாயி, கம்ப்யூட்டர் சிட்டா எடுத்து, வி.ஏ.ஓ.,விடம் சான்றிதழ் பெற்று, வேளாண் விரிவாக்க அலுவலரிடம் சென்று பதிய வைக்க வேண்டும்.

ஒரு விவசாயி பல இடங்களுக்கும் அலைந்து ஒரு வழியாக பதிய வைத்தாலும், நடப்பாண்டு குறுவை தொகுப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.கடந்த ஆண்டு 10 ஆயிரத்து, 500 ஏக்கருக்கு வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு 3,000 ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறையினர் கூறுகின்றனர்.

இது, தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும்.குறுவை தொகுப்பு தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். முப்போகம் சாகுபடி நடைபெறும் மயிலாடுதுறைக்கு, 55 ஆயிரம் ஏக்கர் அறிவித்துள்ளனர்.ஆனால், காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள, நாகை மாவட்டத்தை வேளாண் அதிகாரிகள் உள்நோக்கததோடு புறக்கணிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202211:09:09 IST Report Abuse
ஆரூர் ரங் ஸ்டாலின் சொந்த( திருக்குவளை) மாவட்டம் . அங்கும் பதநீரில் சீனி இல்லை.
Rate this:
Cancel
02-ஜூலை-202210:40:33 IST Report Abuse
ஆரூர் ரங் திராவிட ஆட்சியில் நிஜ இலவசம் என்று எதுவுமில்லை. கொடுப்பதைக் கொடுத்துதான் பெறுவதை பெறயியலும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
02-ஜூலை-202210:27:11 IST Report Abuse
raja கேடுகெட்ட விடியல் வரும் தமிழகத்துக்கு என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தோம் இந்த திருட்டு திமுக ஆட்சிக்கு வந்தால் என்று... கேக்கலையே மக்கா நீங்க கேட்கலையே... கேவலம் ரூவா 2000 ஓட்டையும் உங்களையும் வித்து புட்டீங்களே...இப்போ அனுபவிங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X