கடன் சிறப்பு முகாம்களை நடத்த கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவு

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
சென்னை : தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில், பொது மக்கள் எளிதில் கடன் பெற வசதியாக, ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு கடன் முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பயிர்க் கடன், தங்க நகை அடமானக்
கடன் சிறப்பு முகாம்களை நடத்த கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவு


சென்னை : தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில், பொது மக்கள் எளிதில் கடன் பெற வசதியாக, ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு கடன் முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பயிர்க் கடன், தங்க நகை அடமானக் கடன், சிறு வணிகக் கடன், சுய உதவி குழு கடன் போன்ற பிரிவுகளில், கடன்களை வழங்குகின்றன.அவற்றில் வட்டி குறைவாக இருப்பதுடன், கடன் வழங்க அதிக கெடுபிடி காட்டப்படுவதில்லை.

குறிப்பாக, நகை கடன் வாங்கிய நிலையில், குறித்த காலத்திற்குள் வட்டி, அசல் செலுத்தவில்லை என்றாலும், உடனே ஏல நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. இதனால் பலரும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் கடன் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.இந்த விபரம் கிராமங்களில் வசிக்கும் பலருக்கு பலருக்கு தெரிவதில்லை.

இதையடுத்து, ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு கடன் முகாம்களை நடத்துமாறு, மண்ட இணை பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுஉள்ளது.இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், கடன் முகாம்களை நடத்துவதற்கு, 'நபார்டு' எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தலா ஒரு முகாமுக்கு, 6,000 ரூபாய் நிதி உதவி செய்கிறது.

எனவே, ஒவ்வொரு பகுதியிலும் கடன் முகாம்களை நடத்தி, கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கடன் வழங்குவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X