நடுவானில் விமானத்தில் புகை: பயணிகள் அதிர்ச்சி

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: தலைநகர் டில்லியில் இருந்து ம.பி.,யின் ஜபல்பூருக்கு கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென புகை வந்தது. இதனால், அந்த விமானம் மீண்டும் டில்லிக்கு திரும்பியது.டில்லியில் இருந்து இன்று (ஜூலை2) காலை 6:15 மணிக்கு ஜபல்பூருக்கு பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கிளம்பியது. சிறிது நேரத்தில் 5,000 அடி உயரத்தில் விமானம் பறந்து
விமானம், டில்லி, ஸ்பைஸ்ஜெட், ஜபல்புர், புகை,Jabalpur-bound SpiceJet flight returned to Delhi, Jabalpur-bound SpiceJet flight,
Smoke in-plane, Jabalpur-bound SpiceJet flight landed safely,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தலைநகர் டில்லியில் இருந்து ம.பி.,யின் ஜபல்பூருக்கு கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென புகை வந்தது. இதனால், அந்த விமானம் மீண்டும் டில்லிக்கு திரும்பியது.

டில்லியில் இருந்து இன்று (ஜூலை2) காலை 6:15 மணிக்கு ஜபல்பூருக்கு பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கிளம்பியது. சிறிது நேரத்தில் 5,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானத்தின் கேபினில் இருந்து திடீரென புகை காரணமாக பயணிகள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் காலை 7:00 மணிக்கு பாதுகாப்பாக டில்லி திரும்பியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அந்த விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.


latest tamil news
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat - CHENNAI,இந்தியா
02-ஜூலை-202213:57:47 IST Report Abuse
venkat ஏன் பயணிகள் உயிருடன் விளையாடுகிறார்கள் ..
Rate this:
Cancel
02-ஜூலை-202213:07:56 IST Report Abuse
அப்புசாமி அது ஒண்ணுமில்லை. விமானத்தில் சேரும் குப்பைகளை வெளியே வீசத் தடை இருக்காம். அதனால் அங்கேயே பாத் ரூமில் கொளுத்திட்டாங்க. புகை கசிந்து காட்டிக் குடுத்திடுச்சு.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-ஜூலை-202212:46:03 IST Report Abuse
Ramesh Sargam கடந்த ஒரு வாரத்தில் இதுபோன்ற நிகழ்வு இது இரண்டாம் முறையாகும். கடந்தமுறை பறவை ஒன்று மோதியதில் என்ஜின் தீ பிடித்து, அதை உடனே அறிந்த பெண்விமானி, வெகுசாமர்த்தியமாக விமானத்தை தரை இறக்கி அனைத்து பயணிகளின் உயிரை காப்பாற்றினார். இந்தமுறை விமானத்துக்குள்லேயே பிரச்சினை. இந்தமுறையும் விமானி வெகுசாமர்த்தியமாக விமானத்தை இறக்கி அனைத்து பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். இப்படி நிகழ்வுகள் ஏன் நடக்கிறது? ஒன்று, விமான நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில், விமானம் ஒரு முறை பயணித்தபின், அடுத்த முறை பயணிக்கும் முன்பு முறையாக விமானத்தை பராமரிப்பதில்லை. பெட்ரோல் இருக்கிறதா, உணவு பெட்டிகள், தண்ணீர் இருக்கிறதா, என்று மேலோட்டமாக பார்த்துவிட்டு, மற்ற விஷயங்களில் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. காரணம் இரண்டு, விமானத்தை இயக்கும் விமானி போதிய அளவு ஓய்வு எடுக்கிறாரா என்பதில் லாபம் பார்க்கும் விமான நிறுவனங்கள் போதிய அளவு அக்கறை காட்டுவதில்லை. ஓய்வு இல்லாமல், தொடர்ந்து அவரை விமானம் இயக்கவைப்பதில் குறியாக இருக்கிறார்கள். மேட்கூறிய காரணங்களால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏட்படுகின்றன. DGCA (The Directorate General of Civil Aviation is a statutory body of the Government of India to regulate civil aviation in India) அதிகாரிகள் இந்தவிஷத்தில், விமான நிறுவனங்களிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டால், இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X