நடுவானில் விமானத்தில் புகை: பயணிகள் அதிர்ச்சி| Dinamalar

நடுவானில் விமானத்தில் புகை: பயணிகள் அதிர்ச்சி

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (7) | |
புதுடில்லி: தலைநகர் டில்லியில் இருந்து ம.பி.,யின் ஜபல்பூருக்கு கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென புகை வந்தது. இதனால், அந்த விமானம் மீண்டும் டில்லிக்கு திரும்பியது.டில்லியில் இருந்து இன்று (ஜூலை2) காலை 6:15 மணிக்கு ஜபல்பூருக்கு பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கிளம்பியது. சிறிது நேரத்தில் 5,000 அடி உயரத்தில் விமானம் பறந்து
விமானம், டில்லி, ஸ்பைஸ்ஜெட், ஜபல்புர், புகை,Jabalpur-bound SpiceJet flight returned to Delhi, Jabalpur-bound SpiceJet flight,
Smoke in-plane, Jabalpur-bound SpiceJet flight landed safely,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தலைநகர் டில்லியில் இருந்து ம.பி.,யின் ஜபல்பூருக்கு கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென புகை வந்தது. இதனால், அந்த விமானம் மீண்டும் டில்லிக்கு திரும்பியது.

டில்லியில் இருந்து இன்று (ஜூலை2) காலை 6:15 மணிக்கு ஜபல்பூருக்கு பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கிளம்பியது. சிறிது நேரத்தில் 5,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானத்தின் கேபினில் இருந்து திடீரென புகை காரணமாக பயணிகள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் காலை 7:00 மணிக்கு பாதுகாப்பாக டில்லி திரும்பியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அந்த விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.


latest tamil newsபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X