அழகிய ஹேர்ஸ்டைலில்.. கூந்தல் உதிர்வை மறைக்கலாம்...!

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
கூந்தல் உதிர்வு என்பது தற்போது பலருக்கும் இயல்பான பிரச்னையாக உள்ளது. டீனேஜ் பருவத்தினர் கூட கூந்தல் உதிர்வால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு தீர்வு கேட்டு கூகுளில் தேடித்தேடியே நெட் பேலன்ஸை முடிப்பது கல்லூரி மாணவிகளின் வாடிக்கையாக உள்ளது. ஊட்டச்சத்தில்லா உணவு, போதிய பராமரிப்பின்மை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட காரணங்களால் கூந்தல் உதிர்வு பிரச்னையை
கூந்தல், கூந்தல்உதிர்வு, அடர்த்தியானகூந்தல், அழகுக்குறிப்புகள், அழகு, கூந்தல்அழகு, ஹேர்டிப்ஸ், 
hairtips, hair, tips, beauty tips, beauty, hairstyle, hairfallproblem, hair fall,

கூந்தல் உதிர்வு என்பது தற்போது பலருக்கும் இயல்பான பிரச்னையாக உள்ளது. டீனேஜ் பருவத்தினர் கூட கூந்தல் உதிர்வால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு தீர்வு கேட்டு கூகுளில் தேடித்தேடியே நெட் பேலன்ஸை முடிப்பது கல்லூரி மாணவிகளின் வாடிக்கையாக உள்ளது. ஊட்டச்சத்தில்லா உணவு, போதிய பராமரிப்பின்மை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட காரணங்களால் கூந்தல் உதிர்வு பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க சிகிச்சை முறைகளை பின்பற்றுவது ஒருபக்கம் இருந்தாலும், தற்போதுள்ள உங்களின் அரையடி கூந்தலை அடர்த்தியாக காட்டும் மேஜிக்கல் வழிமுறைகள் இதோ...


latest tamil news



சிறிதளவு கூந்தலை முன்பக்கமாக வெட்டி விடும்போது, உங்களின் நெற்றியை மறைத்தவாறு முன்பக்கமாக இருக்கும். இது உங்களுக்கு ஸ்டைலிஷான தோற்றத்தை தருவதுடன், உங்களின் வயதையும் குறைத்துக்காட்டும்.


latest tamil news



லேயர் ஹேர்கட் முறை உங்களின் கூந்தல் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். கூந்தலை லேயர் கட் செய்து ப்ரீயாக விட்டுவிட வேண்டும்; அதில் பாதி கூந்தலை மட்டும் முன்புறம் தோளில் படருமாறு எப்போதும் பார்த்துக்கொள்ள வேண்டும். இது உங்களை இளமையாகவும், மிகவும் உற்சாகமாக இருப்பது போன்ற ஸ்டைலிஷான தோற்றத்தில் காட்ட உதவுகிறது.


latest tamil news



ஒரு சிலர் நெற்றியை ஒட்டி கூந்தலை வெட்டிவிட தயங்குவர். எனவே, உங்கள் கூந்தல் நிறத்துக்கேற்ப லிப்ஸ்டிக்கை சிறிதளவு நெற்றிப்பகுதியில் மெலிதாக தேய்க்கலாம். அப்போது கூந்தல் அடர்த்தியாக இருப்பது போன்ற ஒரு மாயையை அது உருவாக்கும்.
இல்லாவிட்டால் காஜல் பயன்படுத்தி நெற்றி கூந்தலை ஒட்டியவாறு சிறிது கோடுகளை வரையலாம். கூந்தலின் நிறத்துக்கேற்ப கோட்டின் நிறமும் இருக்க வேண்டும். அப்போதுதான் கூந்தலை பார்க்கும் போது எளிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

சாதாரண சீப்புகளுக்கு பதிலாக கூந்தலை வார ஹேர் பிரஷ் பயன்படுத்தலாம். இதனால் கூந்தல் மென்மையாக இருப்பதுடன், அடர்த்தியாக இருப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X