ஆயத்த ஆடை டிப்ளமாஇலவசமாக படிக்கலாம்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
சென்னை: மத்திய அரசின் துணையுடன் இயங்கும் ஆயத்த ஆடை பயிற்சி, வடிவமைப்பு நிலையத்தில், 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இலவச டிப்ளமா, பட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு, விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.மத்திய அரசு ஜவுளித்துறையின் துணையுடன் சென்னை, கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டையில் ஆயத்த ஆடை பயிற்சி, வடிவமைப்பு நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தின்

சென்னை: மத்திய அரசின் துணையுடன் இயங்கும் ஆயத்த ஆடை பயிற்சி, வடிவமைப்பு நிலையத்தில், 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இலவச டிப்ளமா, பட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கு, விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.மத்திய அரசு ஜவுளித்துறையின் துணையுடன் சென்னை, கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டையில் ஆயத்த ஆடை பயிற்சி, வடிவமைப்பு நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தின் சார்பில் ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம், ஆடை உற்பத்தி தொழில்நுட்பம் எனும் பெயரில், ஓராண்டிற்கான டிப்ளமா படிப்பும், மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பும், நிலையத்தில் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு, 100 சதவீத வேலை வாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. இந்த ஆண்டிற்கான இலவச பயிற்சி, இந்த மாதம் துவக்கப்பட உள்ளது.விருப்பமுள்ள, 35 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் வரவேற்கப்படுகின்றனர். மேலும், தகவல்களுக்கு, 98404 16769, 99520 56889 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி நிலையத்தின் மூத்த முதல்வர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X