மாதுளம்பழத் தோலிலும் நன்மைகள் இருக்கு...!

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்திருப்பதால் ஆரோக்கியத்தில் மாதுளம்பழத்துக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. பழத்தில் மட்டுமின்றி, அதன் தோலிலும் இந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆனால் மாதுளையை மட்டும் சாப்பிட்டு விட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடுகிறோம். இதிலுள்ள நன்மைகளை தெரிந்துகொண்டால் இனிமேல் தோலை வீசாமல் பத்திரப்படுத்தி வைக்கத்தான் தோன்றும். அந்த
pomegranate peel, pomegranate peel benefits, pomegranate, healthtips, health, tips, skincare, Diabetes
மாதுளம்பழத்தோல், மாதுளம்பழம், மாதுளை, மாதுளைதோல், ஆரோக்கியம், ஆரோக்கியகுறிப்புகள், ஹெல்த்டிப்ஸ், சருமஆரோக்கியம், இதயம்

ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்திருப்பதால் ஆரோக்கியத்தில் மாதுளம்பழத்துக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. பழத்தில் மட்டுமின்றி, அதன் தோலிலும் இந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆனால் மாதுளையை மட்டும் சாப்பிட்டு விட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடுகிறோம். இதிலுள்ள நன்மைகளை தெரிந்துகொண்டால் இனிமேல் தோலை வீசாமல் பத்திரப்படுத்தி வைக்கத்தான் தோன்றும். அந்த தோலில் என்னென்ன நன்மைகள் உள்ளன என பார்க்கலாம்.

முகப்பரு, சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்னைகளுக்கு மாதுளம்பழத்தோல் தீர்வாகிறது. தோலை வெயிலில் நன்றாக காயவைத்து மிக்சியில் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப்பொடியுடன் சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் மாஸ்க் ஆக பயன்படுத்தலாம். இதனால் சருமத்தில் கொலாஜன் உற்பத்தி அதிகரித்து சுருக்கங்கள் வரவிடாமல் தவிர்க்கிறது. சருமத்துக்கு இளமைத்தோற்றம் கிடைப்பதுடன், பளபளப்பு அதிகரிக்கிறது; பிக்மண்டேஷன் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கிறது.


latest tamil news



மாதுளையின் தோலில் பாலிஃபினைல்கள் அதிகமாக இருக்கின்றன. இவை கல்லீரல் புற்றுநோய்க்கு நன்மை பயக்கும் மற்றும் கல்லீரலைப் பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது.

மாதுளையின் தோலில் அதிக அளவிலான ஆக்சிஜனேற்றிகள் இருக்கின்றன. இது காது கேளாமை மற்றும் காது சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது.


latest tamil news



இது பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால், ஈறுகள் வலுவடைவதுடன், பற்கள் பளிச்சிடுகிறது.

இதயம் தொடர்பான பிரச்னைகள், நீரிழிவு போன்ற பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. மாதுளைத் தோல் சாறை தொடர்ந்து சாப்பிட ரத்தத்திலுள்ள சர்க்கரை, கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் மேம்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X