ஒற்றை யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
சத்தியமங்கலம்: கேர்மாளம் சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் வாகனஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனுார்,தலமலை,கேர்மாளம்,ஜீரகள்ளி,விளாமுண்டி,கடம்பூர்,டி.என்.பாளையம்,தாளவாடி.உள்ளிட்ட 10வனச்சரகங்கள் உள்ளன.இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில்
ஒற்றை யானை நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சத்தியமங்கலம்: கேர்மாளம் சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் வாகனஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனுார்,தலமலை,கேர்மாளம்,ஜீரகள்ளி,விளாமுண்டி,கடம்பூர்,டி.என்.பாளையம்,தாளவாடி.உள்ளிட்ட 10வனச்சரகங்கள் உள்ளன.இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கேர்மாளம் செல்லும் சாலையில் ஒற்றை யானை சாலையை கடந்து சென்றது.அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்கள் யானையை பார்த்ததும் வாகனங்களை நிறுத்தி விட்டு காத்திருந்தனர்.பின்பு சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்றது.இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது வனவிலங்குகள் அவ்வப்போது இரை,தண்ணீர், தேடி சாலையை கடக்கும் அந்த சமயங்களில் வாகனங்களில் செல்வோர் கவனமுடன் செல்ல வேண்டும்,செல்போன்களில் போட்டோ,வீடியோ,எடுக்க கூடாது.அதிக ஒலிகளை எழுப்பகூடாது.என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X