ஆல்ட் நியூஸ் இணைய தள இணை நிறுவனருக்கு ஜாமின் மறுப்பு| Dinamalar

'ஆல்ட் நியூஸ்' இணைய தள இணை நிறுவனருக்கு ஜாமின் மறுப்பு

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (4) | |
புதுடில்லி :மத உணர்வுகளை புண்படுத்தியதாக 'ஆல்ட் நியூஸ்' இணையதளத்தின் இணை நிறுவனர் மீதான வழக்கில், முகமது சுபைருக்கு கீழ் கோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது. ஆல்ட் நியூஸ்' இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது சுபைர், இவர் ஆளுங்கட்சி செய்தித் தொடர்பாளரின் விஷம் கக்கும் பேச்சை அம்பலப்படுத்தினார். உண்மையை மக்களுக்கு தெரிவிப்பதில், கடந்த சில ஆண்டுகளாக ஆல்ட் நியூசும்,
 ஆல்ட் நியூஸ், இணைய தளம் ,  நிறுவனர் , ஜாமின், மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :மத உணர்வுகளை புண்படுத்தியதாக 'ஆல்ட் நியூஸ்' இணையதளத்தின் இணை நிறுவனர் மீதான வழக்கில், முகமது சுபைருக்கு கீழ் கோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது.



ஆல்ட் நியூஸ்' இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது சுபைர், இவர் ஆளுங்கட்சி செய்தித் தொடர்பாளரின் விஷம் கக்கும் பேச்சை அம்பலப்படுத்தினார். உண்மையை மக்களுக்கு தெரிவிப்பதில், கடந்த சில ஆண்டுகளாக ஆல்ட் நியூசும், சுபைர், பேசியது மத உணர்வுகளை புண்படுத்தியாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil news



முகமது சுபைரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி டில்லி கீழ் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்த மனுவை ஏற்ற கோர்ட் நான்கு நாள் அனுமதி அளித்தது. இந்நிலையில் ஜாமின் கோரி டில்லி பாட்டியாலா கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் டில்லி போலீசார் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அதற்கான ஆதாரங்களை சமர்பித்தனர். இதையடுத்து முகமது சுபைர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X