உதய்பூர் படுகொலை: குற்றவாளியை நீதிமன்ற வளாகத்தில் தாக்கிய பொதுமக்கள்

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
உதய்பூர்: ராஜஸ்தானில் உதய்பூர் படுகொலை சம்பவத்தில் கைதான குற்றவாளிகளில் ஒருவரை நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்தது. ராஜஸ்தானில் உதய்பூரைச் சேர்ந்த டெய்லரான கன்னையா லால், 28ம் தேதி பட்டப்பகலில் இரண்டு பேரால் கழுத்து துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.கொலையாளிகள் கொலை செய்வதை, 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். முஸ்லிம்
Udaipur murder accused attacked by mob outside court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

உதய்பூர்: ராஜஸ்தானில் உதய்பூர் படுகொலை சம்பவத்தில் கைதான குற்றவாளிகளில் ஒருவரை நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்தது.

ராஜஸ்தானில் உதய்பூரைச் சேர்ந்த டெய்லரான கன்னையா லால், 28ம் தேதி பட்டப்பகலில் இரண்டு பேரால் கழுத்து துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.கொலையாளிகள் கொலை செய்வதை, 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

முஸ்லிம் மதம் குறித்து, பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதால், கன்னையா லாலை கொன்றதாக வீடியோவில் கொலையாளிகள் கூறியுள்ளனர். இந்தப் படுகொலை, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil newsஎன்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்தக் கொலையில் ஈடுபட்ட ரியாஸ் அக்தாரி மற்றும் கவுஸ் முகமது ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். மேலும், மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று கைதான குற்றவாளிகளில் ஒருவனர ஜெய்ப்பூர் தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் சிறைக்கு வேனில் கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்த பொதுமக்கள் குற்றவாளியை சரமாரியாக தாக்கி அவனது சட்டையை கிழித்தனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் அவனை பாதுகாப்பாக வேனில் ஏற்றி சிறைக்கு கொண்டு சென்றனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
05-ஜூலை-202216:23:02 IST Report Abuse
raja தமிழகத்திலும் இந்த விழிப்புணர்வு வந்து கொண்டு இருக்கிறது இந்துக்கள் இனி சாதிகளை கடந்து ஒன்றிணைந்து திரு அண்ணாமலை தலைமையில் இந்த திருட்டு திராவிட இந்து விரோத கொள்ளையர்களை விரட்டி அடிக்கும் நேரம் வந்து கொண்டு இருக்கிறது.......
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
03-ஜூலை-202210:25:22 IST Report Abuse
தமிழன் கழுத்தருத்தவனோட சட்டய கிழிச்சாணுக்களாம். பெருமையா இருக்கு.
Rate this:
s sambath kumar - chennai,இந்தியா
04-ஜூலை-202216:04:59 IST Report Abuse
s sambath kumarநீ அவன் தானே..........
Rate this:
Cancel
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜூலை-202209:57:03 IST Report Abuse
Ganesh பொதுமக்கள் குறிப்பாக இந்துக்கள் கொதித்தெழுவார்கள் என்பது புரிகிறது. என்ன நெனச்சு கிட்டு இருக்கீங்க? மொகலாயர்கள் இந்தியாவை நாசம் செய்தார்கள் பின் கிறிஸ்தவர் நாட்டை அடிமைப்படுத்தினர். எங்களது கலாச்சாரம் சகிப்புத்தன்மை என்பதால்தானே. நாங்களும் மாற்றிக்கொள்கிறோம் தேசத்தின் தேவைக்காக.
Rate this:
karuppasamy - chennai,இந்தியா
06-ஜூலை-202212:01:01 IST Report Abuse
karuppasamyஇந்தியர்கள் அரேபியா நாடுகளில் ஒட்டகம் மேய்கின்றனர். இன்னொரு கூட்டம் அமெரிக்காவில் பிழைப்புக்கு அலைகின்றனர் . இந்தியா வல்லரசு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X