விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை!கரூர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு| Dinamalar

விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை!கரூர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Added : ஜூலை 02, 2022 | |
கரூர்:''அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.இலவச மின் இணைப்புகரூர், திருமாநிலையூரில் நேற்று நடந்த அரசு விழாவில், 28.60 கோடி செலவில் முடிவுற்ற திட்டப் பணிகள், 581.44 கோடி ரூபாயில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 80 ஆயிரத்து 750 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் ஸ்டாலின்
விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை!கரூர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கரூர்:''அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


இலவச மின் இணைப்பு


கரூர், திருமாநிலையூரில் நேற்று நடந்த அரசு விழாவில், 28.60 கோடி செலவில் முடிவுற்ற திட்டப் பணிகள், 581.44 கோடி ரூபாயில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 80 ஆயிரத்து 750 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் செந்தில்பாலாஜி அமைச்சராக வருவதற்கு முன், மின் துறை எந்த நிலையில் இருந்தது என்பது எல்லாருக்கும் தெரியும்.


அவர் வந்த பின், மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க மின்னகம் சேவை மையம், மிக குறுகிய காலத்தில், ஒரு லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு, 316 துணை மின் நிலையங்கள் -என, சாதனைகளை செய்து, துறையை மீட்டெடுத்து வருகிறார். பொதுவாக, புதிதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இரண்டாவது ஆண்டு தான் செயல்பட துவங்கும் காலமாக அமையும். ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த நொடியில் இருந்து செயல்பட்டுவருகிறது.



வருத்தப்படுகிறேன்


இந்த ஆட்சியில் மக்களின் முன்னேற்றத்தை அறிய முடிகிறது என்பதால், அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை. நாள்தோறும் மைக் முன் வாந்தி எடுப்பவர்கள் அளிக்கும் பேட்டிகளுக்கு, நான் பதில் சொல்வது இல்லை. என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் வாயிலாக பிரபலம் அடைய நினைப்பவர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, நேரு, சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X