நகரும் உணவு மேஜை - வைரல் வீடியோ..!

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
நகரும் உணவகம் பார்த்திருப்போம், நகரும் உணவு மேஜையை பார்த்திருக்கிறீர்களா... ஆம் இளைஞர்கள் சிலர் அதனை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். சிறிய ரக நான்கு சக்கரங்களை கொண்ட வாகனத்தின் அடிப்பகுதியின் மீது, வட்ட வடிவிலான மேஜை மற்றும் நாற்காலிகளை பொருத்தியுள்ளனர். அந்த வாகனத்தை நகர்த்துவதற்கு, இருசக்கர வாகனங்களில் இருப்பது போல ஹேண்டில்பார் மேஜைக்கு நடுவில் உள்ளது. அதனை
Moving Food Table, Viral Video, நகரும் மேஜை, வைரல் வீடியோ, Food Table, Viral, Twitter, Facebook, Instagram, தினமலர், தினமலர் செய்தி, dinamalar, dinamalardotcom,

நகரும் உணவகம் பார்த்திருப்போம், நகரும் உணவு மேஜையை பார்த்திருக்கிறீர்களா... ஆம் இளைஞர்கள் சிலர் அதனை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். சிறிய ரக நான்கு சக்கரங்களை கொண்ட வாகனத்தின் அடிப்பகுதியின் மீது, வட்ட வடிவிலான மேஜை மற்றும் நாற்காலிகளை பொருத்தியுள்ளனர்.
அந்த வாகனத்தை நகர்த்துவதற்கு, இருசக்கர வாகனங்களில் இருப்பது போல ஹேண்டில்பார் மேஜைக்கு நடுவில் உள்ளது. அதனை சாப்பிடுவதற்காக அமர்ந்துள்ளவர்களில் ஒருவர் இயக்க மற்ற 3 பேர் அமர்ந்து உணவு உண்ட படியே பயணிக்கின்றனர்.
இந்த வாகனத்தில், இளைஞர்கள் நால்வரும் அமர்ந்தபடி, எரிபொருள் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்குக்கு கொண்டு வருவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெட்ரோல் பங்கில் இருக்கும் நபர், பெட்ரோலை நிரப்பியதும் 4 இளைஞர்களும் அந்த வாகனத்தில் புறப்பட்டுச் செல்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X