தமிழகத்தில் கோவிட் : 2 ஆயிரத்து 500 ஐ தாண்டியது; ஒரே நாளில் 2,533 பேர் பாதிப்பு

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை 2 ம் தேதி) ஒரே நாளில் 2,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூலை 2 ) 33,246 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 1,059; செங்கல்பட்டு 393; திருவள்ளூர் 142, கோவை 117; கன்னியாகுமரி 88; காஞ்சிபுரம் 87; திருச்சி 72 ;

சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை 2 ம் தேதி) ஒரே நாளில் 2,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news



இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூலை 2 ) 33,246 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 1,059; செங்கல்பட்டு 393; திருவள்ளூர் 142, கோவை 117; கன்னியாகுமரி 88; காஞ்சிபுரம் 87; திருச்சி 72 ; திருநெல்வேலி 70 ; மதுரை 50; தூத்துக்குடி 62, சேலம் 38; ஈரோடு 34 ;ராணிப்பேட்டை 29; விழுப்புரம் 27; சிவகங்கை 25; கிருஷ்ணகிரி 19; விருதுநகர் 17; பெரம்பலுார் 16; வேலுார் 15 ; தஞ்சாவூர் 14; திருப்பூர், திருவண்ணாமலை , நாமக்கல்13; அரியலுார் 12; தேனி 10; திண்டுக்கல், கரூர், கள்ளக்குறிச்சி 7 ; நீலகிரி, நாகப்பட்டினம், திருவாரூர் 9; தென்காசி16; தேனி 6 ; நாகப்பட்டினம், திருப்பத்துார், மயிலாடுதுறை, ராமநாதபுரம் 5 ; புதுக்கோட்டை 4; தர்மபுரி, கடலுாரில் தலா ஒருவரையும் சேர்த்து மொத்தம் 2,533 பேருக்கு தொற்று உறுதியானது.


latest tamil news



தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,80,103 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,28,758 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து ஆயிரத்தை தாண்டியது. நேற்று (ஜூலை 1ம் தேதி ) 1,025 ஆக இருந்த நிலையில் இன்று (ஜூலை 2 ம் தேதி) சென்னையில் 1,059 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,319 ஆக உள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X