சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அடுத்தது யார் யார்?

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
அடுத்தது யார் யார்?'பதவியேற்ற முதல் நாளிலேயே ஆட்டத்தை துவக்கி விட்டனர். இன்னும் இரண்டரை ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்ய காத்துள்ளனரோ...' என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கட்சிகளின் நிர்வாகிகள்.அதிரடியான அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்த மஹாராஷ்டிராவில், சிவசேனா அதிருப்தி குழு மற்றும் பா.ஜ,

அக்கம் பக்கம்


அடுத்தது யார் யார்?



'பதவியேற்ற முதல் நாளிலேயே ஆட்டத்தை துவக்கி விட்டனர். இன்னும் இரண்டரை ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்ய காத்துள்ளனரோ...' என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கட்சிகளின் நிர்வாகிகள்.
அதிரடியான அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்த மஹாராஷ்டிராவில், சிவசேனா அதிருப்தி குழு மற்றும் பா.ஜ, கூட்டணி அரசு புதிதாக பொறுப்பேற்றுஉள்ளது. சிவசேனா அதிருப்தி குழுவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர். முன்னதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சியில் இருந்த போது, மஹாராஷ்டிரா மாநில பா.ஜ.,வினருக்கு எதிராக போலீஸ் நடவடிக்கைகள் பாய்ந்தன.
சிவசேனா எம்.பி.,யான சஞ்சய் ராவத், பா.ஜ., தலைவர்களை கடுமையாக தாக்கிப் பேசி வந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், காற்றின் திசை, மாற்றி அடிக்கத் துவங்கியுள்ளது. புதிய அரசு பதவியேற்ற முதல் நாளிலேயே சஞ்சய் ராவத், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். தேசியவாத காங்., மூத்த தலைவர் சரத் பவாருக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
இந்த அதிரடியைப் பார்த்து, சிவசேனா, காங்., - தேசியவாத காங்., கட்சியினர், 'அடுத்ததாக, நம் மீதும் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, மஹாராஷ்டிரா போலீசாரின் பார்வை திரும்புமோ...' என்ற கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.


அவசரப்பட்டு விட்டோமோ!



'அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டதே...' என்று கண்ணீர் வடிக்கிறார், காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத். காங்கிரசில் மட்டுமல்ல, நம் நாட்டில் இப்போதுள்ள மூத்த அரசியல்வாதிகளில், குலாம்நபி ஆசாத்தும் ஒருவர். ஜம்மு - காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் என, பல முக்கிய பதவிகளை வகித்தவர். தற்போதைய மத்திய காங்., தலைமைக்கும், இவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. 'காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்...' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, சோனியாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, 23 மூத்த தலைவர்களுக்கு, குலாம்நபி ஆசாத் தான் முன்னோடி.இதனால், கடும் கோபமடைந்த காங்., மேலிடம், குலாம்நபி ஆசாத்தை ஓரம் கட்டியது. ராஜ்யசபா எம்.பி., பதவியும், அவருக்கு தரப்படவில்லை. இதற்கிடையில், பிரதமர் மோடி, ராஜ்யசபாவில் குலாம்நபி ஆசாத்தை பாராட்டி பேசியதும்,
காங்., கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில், ஆளும் தே.ஜ., கூட்டணி சார்பில், குலாம்நபி ஆசாத் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற தகவலும் அடிபட்டது. ஆசாத்தும், அதை பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், பா.ஜ., சார்பில், திரவுபதி முர்மு, தற்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனால், சோகத்தில் ஆழ்ந்துள்ள குலாம்நபி ஆசாத், 'நாம் தான் அவசரப்பட்டு, காங்கிரசை பகைத்து விட்டோம் போலிருக்கிறதே...' என்று புலம்புகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X