வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை :''முந்தைய ஆட்சியில் என்னை சட்ட விரோதமாக சிறையில் வைத்து அடித்து, உதைத்தனர்,'' என, மராத்தி நடிகை கேதகி சிதலே கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மஹராஷ்டிராவில் மராத்தி நடிகை கேதகி சிதலே, தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை முகநுாலில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து கேதகி சிதலே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒருமாத சிறைவாசத்திற்குப் பின் சமீபத்தில் அவருக்கு ஜாமின் கிடைத்தது.
![]()
|
சில தினங்களுக்கு முன் மஹராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மாறியதை அடுத்து, கேதகி சிதலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:எந்த தவறும் செய்யாத என்னை 'வாரன்ட்' இன்றி சட்ட விரோதமாக கைது செய்தனர். ஒரு மாதம் சிறையில் நான் துன்புறுத்தப்பட்டேன். என்னை அடித்து, உதைத்தனர். என் மீது கருப்பான விஷ மை வீசப்பட்டது. தற்போது ஒரு வழக்கில் ஜாமினில் வந்துள்ளேன். என் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.