மாணவர்களுக்கு சைக்கிள்: தயாரிக்கும் பணி 'விறுவிறு'

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
செய்யூர்:செய்யூரில் பிளஸ் 1 பயிலும் மாணவ - மாணவியருக்கு, அரசு சார்பில் இலவசமாக வழங்குவதற்கு, சைக்கிள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.செய்யூரில், குளக்கரை எதிரே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. தமிழக அரசு சார்பாக, அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.இரண்டு ஆண்டுகளாக, கொரானா
மாணவர்களுக்கு சைக்கிள்: தயாரிக்கும் பணி 'விறுவிறு'

செய்யூர்:செய்யூரில் பிளஸ் 1 பயிலும் மாணவ - மாணவியருக்கு, அரசு சார்பில் இலவசமாக வழங்குவதற்கு, சைக்கிள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
செய்யூரில், குளக்கரை எதிரே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. தமிழக அரசு சார்பாக, அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.இரண்டு ஆண்டுகளாக, கொரானா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தமிழக அரசு சார்பாக பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தாண்டு, பிளஸ் 1 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்காக 'டெண்டர்' விடப்பட்டு, பஞ்சாப் மாநிலத்திலிருந்து சைக்கிள் உதிரி பாகங்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.செய்யூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 700 சைக்கிள்களை பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இங்கு பொருத்தப்படும் சைக்கிள்கள், செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X