பொருட்காட்சிக்கு போங்க குதூகலத்துக்கு 'கியாரண்டி'

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
பொருட்காட்சி என்றாலே, பொதுமக்களுக்கு ஆனந்தம் தான். கோவை சிறைச்சாலை மைதானத்தில் நடக்கும் அரசு பொருட்காட்சியை காண்பதில், அனைவருக்கும் அலாதி மகிழ்வு இருக்கும். தற்போது நடந்து வரும் பொருட்காட்சியில், அனைத்து துறை அரங்குகளும் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு அரங்கும் பார்வையாளருக்கு ஒவ்வொரு விஷயத்தை கற்றுக்கொடுக்கும் விதத்தில் அமைத்திருக்கின்றன. செய்தி - மக்கள் தொடர்பு துறை
பொருட்காட்சிக்கு போங்க குதூகலத்துக்கு 'கியாரண்டி'

பொருட்காட்சி என்றாலே, பொதுமக்களுக்கு ஆனந்தம் தான். கோவை சிறைச்சாலை மைதானத்தில் நடக்கும் அரசு பொருட்காட்சியை காண்பதில், அனைவருக்கும் அலாதி மகிழ்வு இருக்கும். தற்போது நடந்து வரும் பொருட்காட்சியில், அனைத்து துறை அரங்குகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அரங்கும் பார்வையாளருக்கு ஒவ்வொரு விஷயத்தை கற்றுக்கொடுக்கும் விதத்தில் அமைத்திருக்கின்றன. செய்தி - மக்கள் தொடர்பு துறை அரங்கில், அரசு அறிவித்துள்ள திட்டங்களை காணலாம். வனத்துறை அரங்கில் பறவைகள் மற்றும் விலங்குகள் படங்களை காண்பதோடு, பாய்ந்து வரும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிறுத்தையும், புலியும் சிலிர்க்க வைக்கின்றன.
வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் வாகனம் ஓட்டுவது போன்ற உணர்வுடன் கூடிய டிஜிட்டல் டிரைவிங் மையம், மாநகராட்சியின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம், பள்ளி கல்வித்துறையில் மாணவர்களின் படைப்பு, சுகாதாரத்துறையின் செயல்பாடுகள், தாட்கோ கடனுதவி திட்டங்கள், காவல்துறையின் கண்காணிப்பு பணிகள் பார்வையாளர்களை பரவசம் அடையச் செய்கின்றன. அத்துடன் உண்டு மகிழ பல வகையான உணவு கூடங்களும், குழந்தைகள் விளையாடி மகிழ ராட்டினங்களும் இருக்கின்றன.என்ன, போலாமா ஒரு ரவுண்டு?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X