சோகம் இழையோட... ராகம் துதிபாடும் 'எஸ்ராஜ்'…

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
மயூரி வீணை, தில்ரூபா ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய இசைக்கருவி எஸ்ராஜ். மூன்று நுாற்றாண்டுகளுக்கு முன் பஞ்சாபில் உருவானது. தில்ரூபாவில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட வடிவம் கொண்டது. சாரங்கி, தில்ரூபா, சரோத் கருவிகளைப் போன்றே, இதன் இசையில் மெல்லிய சோகம் இழையோடும். துள்ளல் இசையையும் வாசிக்கலாம் என்றாலும், உணர்வுகளை ஊடறுக்கும் மெல்லிய சோகமே இதன் சிறப்பம்சம்.இந்தக்

மயூரி வீணை, தில்ரூபா ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய இசைக்கருவி எஸ்ராஜ். மூன்று நுாற்றாண்டுகளுக்கு முன் பஞ்சாபில் உருவானது. தில்ரூபாவில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட வடிவம் கொண்டது.

சாரங்கி, தில்ரூபா, சரோத் கருவிகளைப் போன்றே, இதன் இசையில் மெல்லிய சோகம் இழையோடும். துள்ளல் இசையையும் வாசிக்கலாம் என்றாலும், உணர்வுகளை ஊடறுக்கும் மெல்லிய சோகமே இதன் சிறப்பம்சம்.இந்தக் கருவி மட்டுமல்ல, இதுபோன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் குறித்து இந்த தலைமுறையினர் அறிந்துகொள்ளாமல் இருப்பது துரதிருஷ்டம் என்கிறார் பாடகியும், இந்த இசைக்கருவியை வாசிப்பவருமான பைரவி கோபி. கோவையைச் சேர்ந்த இவர், கர்நாடக இசைக்கலைஞர். 'மியூசிக் ஜோன்' என்ற பெயரில், இசைக்கருவிகள் விற்பனையகம் நடத்துகிறார்.அவரிடம் பேசியதிலிருந்து…சமீபகாலமாக இசைக்கருவிகள் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆனால், கிடார், கீ போர்டு போன்ற மேற்கத்திய இசைக்கருவிகள் மீதான மோகமாகவே இருக்கிறது.
கடம், வீணை போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளை விரும்பி வாங்குவதில்லை. இவற்றை முறையாக பயிற்றுவிக்கக்கூட ஆளில்லை.ஓரளவு தேர்ந்த இசைக்கலைஞர்களுக்கே, சில பாரம்பரிய இசைக்கருவிகள் பற்றித் தெரிவதில்லை. உதாரணமாக, எஸ்ராஜ் கருவியைச் சொல்லலாம். இது, சாரங்கியைப் போல, வில்லைக் கொண்டு வாசிக்கும் கம்பிக் கருவி. இதன் உருவாக்கத்தில் ஆட்டுத்தோல், குதிரை முடி பயன்படுத்தப்படுகிறது.இந்த இசைக்கருவி, பயன்பாட்டில் இருந்து அழிந்து வருகிறது.
இந்தியாவிலேயே விரல் விட்டும் எண்ணும் அளவிலேயே இதை வாசிக்கின்றனர்.தமிழகத்தில் கிட்டத்தட்ட, இதை வாசிப்பவர் யாருமே இல்லை எனலாம். பாரம்பரிய இசைக்கருவிகள் திரைத்துறையில் பிரபலமானால், அதைப்பார்த்து, சிலர் கற்க முன் வருகின்றனர். இசைக்கருவிகளை, குறிப்பிட்ட பிரிவினர் இறை வழிபாட்டுக்கு மட்டும் வாங்கிச் செல்கின்றனர். அனைத்து தரப்பினரும் கற்க முன்வர வேண்டும். பாரம்பரிய இசைக்கருவிகள் நம்மோடு அழிந்து விடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்.எஸ்ராஜைப் போலவே, ஆதங்கம் தொனிக்க பேசினார் பைரவி கோபி.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X