8 வயது சிறுமி 8 மணி நேரம்:பரத நாட்டியம் ஆடி அசத்தல்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
கோவையை சேர்ந்த எட்டு வயது சிறுமி, தொடர்ந்து எட்டு மணி நேரம் பரதநாட்டியம் ஆடி, இரட்டை சிலம்பம் சுற்றி, சாதனை படைத்தார்.சின்னவேடம்பட்டி, சக்தி நகரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம்-திவ்யா தம்பதி மகள் சாதனா, 8; சைதன்யா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். ஒன்றரை ஆண்டுகளாக, முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில், சிலம்பம் பயில்கிறார்.சின்னவேடம்பட்டி, சி.எம்.எஸ்.,
8 வயது சிறுமி 8 மணி நேரம்:பரத நாட்டியம் ஆடி அசத்தல்

கோவையை சேர்ந்த எட்டு வயது சிறுமி, தொடர்ந்து எட்டு மணி நேரம் பரதநாட்டியம் ஆடி, இரட்டை சிலம்பம் சுற்றி, சாதனை படைத்தார்.

சின்னவேடம்பட்டி, சக்தி நகரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம்-திவ்யா தம்பதி மகள் சாதனா, 8; சைதன்யா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். ஒன்றரை ஆண்டுகளாக, முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில், சிலம்பம் பயில்கிறார்.சின்னவேடம்பட்டி, சி.எம்.எஸ்., கல்லுாரியில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில், காலை, 9:00 முதல் மாலை, 5:00 வரை தொடர்ந்து, 8 மணி நேரம் பரத நாட்டியம் ஆடி, இரட்டை சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார். இச்சாதனையை, 'இந்தியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் அங்கீகரித்துள்ளது. பதக்கம், கேடயம் மற்றும் கோப்பையை, நடுவர் பிரகாஷ்ராஜ் வழங்கினார்.தொடர்ந்து, பரதநாட்டிய பயிற்சியாளர் மகாலட்சுமி, முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழக மேலாளர் கார்த்திக், துணை பயிற்சியாளர் கலையரசி மற்றும் சிலம்ப பயிற்சி மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X