ஊரப்பாக்கத்தில் பூங்காசீரமைக்க வலியுறுத்தல்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
கூடுவாஞ்சேரி,:ஊரப்பாக்கத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைத்து தரும்படி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நந்திவரம் - கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தில், பூங்கா தெருவில் 150 குடும்பங்கள் உள்ளன.இங்கு வசிப்போரின் பொழுதுபோக்குக்காக, பூங்கா ஒன்று உள்ளது. பூங்காவில் சிறுவர்கள் விளையாட உபகரணங்கள் இருந்தும், முறையான பராமரிப்பு இல்லாததால், பயனற்ற நிலையில்
ஊரப்பாக்கத்தில் பூங்காசீரமைக்க வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி,:ஊரப்பாக்கத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைத்து தரும்படி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தில், பூங்கா தெருவில் 150 குடும்பங்கள் உள்ளன.இங்கு வசிப்போரின் பொழுதுபோக்குக்காக, பூங்கா ஒன்று உள்ளது. பூங்காவில் சிறுவர்கள் விளையாட உபகரணங்கள் இருந்தும், முறையான பராமரிப்பு இல்லாததால், பயனற்ற நிலையில் உள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த ஜெ.அனிதா, 29, என்பவர் கூறியதாவது:ஊரப்பாக்கத்தில் ஒரே ஒரு பூங்கா தான் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சென்று நேரத்தை செலவிடுவதற்கு, பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு வசதியாக உபகரணங்கள் இருந்தும், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் பயனற்று காணப்படுகின்றன
பூங்காவை சீரமைத்து தரும்படி, ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்தோம். அப்போது மட்டும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து சுத்தம் செய்தனர். அதன் பின், முறையாக பராமரிக்கவில்லை. பூங்காவை முறையாக பராமரித்தால், குழந்தைகள் மற்றும் பெரியோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X