குதிரையுடன் ஆட்டம், கடுப்பானதால் ஓட்டம் - வைரல் வீடியோ..!

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சம், இன்றைய இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரீல்ஸ் மோகத்தால், வீடியோ எடுப்பதற்காக இளைஞர்கள் பல்வேறு பயங்கரமான சாகச முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். ரீல்ஸ் வீடியோவிற்கு கிடைக்கும் லைக்ஸ் மற்றும் கமெண்டுகளுக்காக சிலர் ரயில் முன் நின்று வீடியோ எடுப்பது, உயரமான மலை மீது ஏறி வீடியோ எடுப்பது போன்ற உயிருக்கு ஆபத்தான
Horse, Instagram, Reels, Reels video, Viral Video, Viral, குதிரை, இன்ஸ்டாகிராம், இன்ஸ்டா ரீல்ஸ், ரீல்ஸ், ரீல்ஸ் வீடியோ, வைரல், வைரல் வீடியோ, தினமலர், தினமலர் செய்தி, dinamalar, dinamalardotcom,

இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சம், இன்றைய இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரீல்ஸ் மோகத்தால், வீடியோ எடுப்பதற்காக இளைஞர்கள் பல்வேறு பயங்கரமான சாகச முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.
ரீல்ஸ் வீடியோவிற்கு கிடைக்கும் லைக்ஸ் மற்றும் கமெண்டுகளுக்காக சிலர் ரயில் முன் நின்று வீடியோ எடுப்பது, உயரமான மலை மீது ஏறி வீடியோ எடுப்பது போன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனால் பலரும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவதும் நாம் அறிந்ததே.
இந்நிலையில், பெண் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக குதிரை ஒன்றை தொட்டபடி ஆடுகிறார். அப்போது, கடுப்பான குதிரை அந்த பெண்ணை எட்டி உதைக்க முயன்றதால், பயந்து போன அந்த பெண் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் இது தேவையா என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X