ஒரகடம் அருகே இன்று அகழாய்வு பணி துவக்கம்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார், :மத்திய தொல்லியல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டில், இன்று அகழாய்வு பணிகள் துவங்க உள்ளன. இதற்கான நில அளவீடு பணிகளை நேற்று தொல்லியல் துறையினர் செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், ஒரகடம் அருகே, வடக்குப்பட்டு ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, புவி மேற்பரப்பில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த தொல்பொருட்கள்
ஒரகடம் அருகே இன்று  அகழாய்வு பணி துவக்கம்

ஸ்ரீபெரும்புதுார், :மத்திய தொல்லியல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டில், இன்று அகழாய்வு பணிகள் துவங்க உள்ளன. இதற்கான நில அளவீடு பணிகளை நேற்று தொல்லியல் துறையினர் செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், ஒரகடம் அருகே, வடக்குப்பட்டு ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, புவி மேற்பரப்பில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.மேலும், வடக்குப்பட்டில் பாதுகாக்கப்பட்ட மூன்று தொல்லியல் மேடுகள் உள்ளன. அந்த மேடுகளில் அகழாய்வு செய்ய, மத்திய தொல்லியல் துறையினர் திட்டமிட்டனர்.முதற்கட்டமாக, வடக்குப்பட்டில் உள்ள ஒரு தொல்லியல் மேட்டில், ௧௦௦ அடி நீளம், ௧௦௦ அடி அகலத்தில் அகழாய்வு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைத்துள்ளது.இதையடுத்து வடக்குப்பட்டில் பூமி பூஜையுடன் அகழாய்வு பணிகள் இன்று காலை 9:30 மணியளவில் துவங்குகின்றன.இதில், சிறப்பு அழைப்பாளராக கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொண்ட பிரபல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பங்கேற்று, அகழாய்வு பணிகளை துவக்கி வைக்கிறார். சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில், 15 பேர், மூன்று மாதம் அகழாய்வு பணிகளில் ஈடுப்பட உள்ளனர்.இந்த அகழாய்வின் வாயிலாக வடக்குப்பட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்று தொடக்க காலம் முதல் உள்ள வாழ்விடச் சான்றுகள் கிடைக்கும் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X