'ஆன்லைனில்' சொத்து வரிசெலுத்தினால் சலுகை

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
சென்னை, :சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சியில் சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டது. சீராய்வு செய்யப்பட்ட சொத்துவரி குறித்த விபரங்கள் மற்றும் அறிவிப்புகள், தபால் துறை வாயிலாக சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஜூன் 27 முதல் இதுவரை, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதில், முந்தைய சொத்துவரி

சென்னை, :சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சியில் சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டது. சீராய்வு செய்யப்பட்ட சொத்துவரி குறித்த விபரங்கள் மற்றும் அறிவிப்புகள், தபால் துறை வாயிலாக சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஜூன் 27 முதல் இதுவரை, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதில், முந்தைய சொத்துவரி மற்றும் பொது சீராய்வின்படி நிர்ணயம் செய்யப்பட்ட சொத்துவரி விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது, சொத்துவரியை எளிதாக செலுத்தும் வகையில், சீராய்வு அறிவிப்புகளில், 'tiny.url மற்றும் QR Code' ஆகிய வழிமுறைகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும் பல்வேறு வகையிலும் சொத்துவரி செலுத்தலாம். வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி என்ற பெயரில், காசோலைகள் மற்றும் வரைவோலைகள், கடன் பற்று அட்டை வாயிலாக, மாநகராட்சி வரி வசூலிப்பாளர்களிடம் செலுத்தி, வரிசீட்டினை பெற்று கொள்ளலாம் சென்னை மாநகராட்சியின் வலைதளம் https://chennaicorporation.gov.in வாயிலாக எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல் சொத்துவரி செலுத்தலாம் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் வாயிலாக பணமாகவும், நம்ம சென்னை, 'பேடிஎம்' ஆகிய கைப்பேசி செயலிகள் வாயிலாகவும் சொத்துவரி செலுத்தலாம் 'பாரத் பில் பேமென்ட் சிஸ்டம்' வாயிலாகவும், மண்டல, வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களிலும் சொத்துவரி செலுத்தலாம்.மாநகராட்சி சொத்துவரியை ஆன்லைன் வாயிலாக செலுத்தும்பட்சத்தில் குறிப்பிட்ட வங்கிகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பரிசு கூப்பன்கள்; குறிப்பிட்ட சதவீத பணச்சலுகை; திரைப்பட நுழைவு சீட்டு போன்ற சலுகைகள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.எனவே, சொத்து உரிமையாளர்கள், இந்த வழிமுறைகளை பின்பற்றி, சொத்துவரி செலுத்தி, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X