ஊட்டி அருகே 30 அடி பள்ளத்தில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து பெண் பலி| Dinamalar

ஊட்டி அருகே 30 அடி பள்ளத்தில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து பெண் பலி

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | |
ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில்டெம்போ டிராவலர் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.சென்னையை சேர்ந்த 14 பேர் டெம்போ டிராவல்சில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் மசினகுடிக்கு சென்றபோது கல்லட்டி அருகே 10வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த டெம்போ டிராவலர் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இச்சம்பவத்தில்
 ஊட்டி அருகே 30 அடி பள்ளத்தில் டெம்போ டிராவலர் கவிழ்ந்து பெண் பலி

ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில்டெம்போ டிராவலர் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.
சென்னையை சேர்ந்த 14 பேர் டெம்போ டிராவல்சில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் மசினகுடிக்கு சென்றபோது கல்லட்டி அருகே 10வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த டெம்போ டிராவலர் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இச்சம்பவத்தில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முத்துமாரி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் படுகாயத்துடன் ஊட்டி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X