மழை நீர் வடிகால் பணியில் விபத்துவடமாநில தொழிலாளி உயிரிழப்பு

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
புதுவண்ணாரப்பேட்டை, :சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலையில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, கடந்த இரு வாரங்களாக நடந்து வருகிறது.இங்கு, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட 10 நபர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியில் சில 'கம்பெனி'கள் உள்ளன. மழைக்கு இவற்றின் சுற்றுச்சுவர் சேதமடைந்து இருந்தது.வழக்கம் போல், கடந்த 30ம் தேதி மழை நீர் வடிகால் பணி நடந்தது.
மழை நீர் வடிகால் பணியில் விபத்துவடமாநில தொழிலாளி உயிரிழப்பு

புதுவண்ணாரப்பேட்டை, :சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலையில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, கடந்த இரு வாரங்களாக நடந்து வருகிறது.இங்கு, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட 10 நபர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியில் சில 'கம்பெனி'கள் உள்ளன. மழைக்கு இவற்றின் சுற்றுச்சுவர் சேதமடைந்து இருந்தது.வழக்கம் போல், கடந்த 30ம் தேதி மழை நீர் வடிகால் பணி நடந்தது. அப்போது திடீரென, 10 அடி உயரம், 50 மீட்டர் நீளமுள்ள ஒரு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் சிக்கி, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த நதீம், 28; மசூத், 34; ஷானவாஸ், 18, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.தகவலறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக, வடமாநில தொழிலாளர்கள் மூவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மசூத், வலது கை உடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X