'ரசாயன' மீன் விற்பனை; அதிகாரிகள் விசாரணை

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
கோவை:கோவை, வடவள்ளியை சேர்ந்தவர் சிவா; புகைப்பட கலைஞர்.இவர், நேற்று காலை லாரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில், ஒன்னே கால் கிலோமீன் வாங்கியுள்ளார். வீட்டுக்குச் சென்று சுத்தம் செய்தபோது, ரசாயன வாசம் வீசியது. குழம்பு வைத்தபோதும், மீன் குழம்பு மணம் வரவில்லை. வீடு முழுவதும் பார்மலின் வாசமே வீசியது. சாப்பிட்டு பார்த்தபோது குமட்டியிருக்கிறது.ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் என்பதை
'ரசாயன' மீன் விற்பனை; அதிகாரிகள் விசாரணை

கோவை:கோவை, வடவள்ளியை சேர்ந்தவர் சிவா; புகைப்பட கலைஞர்.இவர், நேற்று காலை லாரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில், ஒன்னே கால் கிலோமீன் வாங்கியுள்ளார். வீட்டுக்குச் சென்று சுத்தம் செய்தபோது, ரசாயன வாசம் வீசியது. குழம்பு வைத்தபோதும், மீன் குழம்பு மணம் வரவில்லை. வீடு முழுவதும் பார்மலின் வாசமே வீசியது. சாப்பிட்டு பார்த்தபோது குமட்டியிருக்கிறது.ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் என்பதை புரிந்துகொண்ட சிவா, சமைக்கப்பட்ட மீன்களுடன்நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். மீன்களில் ரசாயனம் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அவரை, உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் செய்ய, அறிவுறுத்தினர். உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்ததும், அத்துறையினர் விசாரித்தனர்.கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், ''மீன்களில் ரசாயனம் சேர்க்கப்பட்டதாக வந்த புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீன் வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், இன்று கோவை மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொள்வர். தவறு செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X