அடுத்த தலைமுறைக்கு செ(ா)ல்லும்...முப்பாட்டன் காலத்து கலை!

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
கும்மியடி பெண்ணே கும்மியடி...தமிழ்நாடு முழுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி!என, பாரதியாரின் வரிகளை கேட்டு வளர்ந்த இம்மண்ணில், வருங்கால சந்ததியினருக்கு இக்கலையை கற்றுத்தரவே ஆளில்லை என்பது வேதனையின் உச்சம். வாத்திய கருவியே இல்லாத காலத்திலும், வரிக்கு வரி மெட்டு போட்டு, கை தட்டியபடியே இசையின் நயத்தில் லயிக்க வைத்த பாரம்பரிய கும்மியாட்ட கலைஞர்களை, இன்று காண்பதே
அடுத்த தலைமுறைக்கு செ(ா)ல்லும்...முப்பாட்டன் காலத்து கலை!

கும்மியடி பெண்ணே கும்மியடி...

தமிழ்நாடு முழுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி!என, பாரதியாரின் வரிகளை கேட்டு வளர்ந்த இம்மண்ணில், வருங்கால சந்ததியினருக்கு இக்கலையை கற்றுத்தரவே ஆளில்லை என்பது வேதனையின் உச்சம். வாத்திய கருவியே இல்லாத காலத்திலும், வரிக்கு வரி மெட்டு போட்டு, கை தட்டியபடியே இசையின் நயத்தில் லயிக்க வைத்த பாரம்பரிய கும்மியாட்ட கலைஞர்களை, இன்று காண்பதே அரிதாகிவிட்டது.இதற்கிடையிலும், ஆறுதல் அளிக்கும் விதமாக, திருப்பூரில் செவ்வாந்தாம்பாளையம், கே.ஆர்.எஸ்., தோட்டத்தில் பவளக்கொடியின் 32வது கும்மியாட்டம் அரங்கேற்றம் சமீபத்தில் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வயது பாகுபாடின்றி பெண்கள் இருபுறமும் சரிசமமாக நின்று ஆடிக்கொண்டே வர, இசைக்கேற்ப கைகளை தட்டி கால்களையும், இடுப்பையும், தலையையும் அழகாக அசைந்தும், குனிந்தும் நிமிர்ந்தும் ஆடியது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.விநாயகர் வழிபாடு, சலங்கை பூஜை, சலங்கை அணிவித்தல் என, முருகன், அம்மன் பாடல்களுக்கு, அழகாக ஆடி, பார்வையாளர்களை பரவசமடைய செய்தனர்.கும்மியாட்டம் குறித்து, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அம்மன் விஸ்வநாதன் மற்றும் அருணாசலம் ஆகியோர் கூறியதாவது:கும்மியாட்டம் பெரும்பாலும் கிராமங்களில் திருவிழா நாட்களில் பல பெண்கள் சேர்ந்து வட்டமாக சுழன்றபடி ஆடும் ஓர் அற்புதமான நடனக்கலை. எந்தவொரு இசைக்கருவியும் இல்லாமல் பெண்கள் ஒரு வட்டமாக சூழ்ந்துகொண்டு கைகளை தட்டிக்கொண்டே இறைவனை வேண்டி பாடுவதே இதன் சிறப்பம்சம்.ஊரும், ஊர் மக்களும் என்றென்றும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டி இந்த ஆட்டத்தை ஆடுவர். நகரத்தில் வசிக்கும் பலருக்கும் இது தெரிய வாய்ப்பில்லை. இதனை மீட்டெடுக்கும் முயற்சியாக, பவளக்கொடி கும்மியாட்டம் கலைக்குழு செயல்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ஆண்கள், பெண்களுக்கு கும்மியாட்ட பயிற்சி அளித்து வருகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கான அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடத்துகிறது. இதன் மூலமாக நமது பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இன்றுவரை புழக்கத்தில் இருக்கும் இந்த கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X