சென்னையில்பிரமாண்டமானபழைய புத்தகக்கடை

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
- நமது நிருபர்--காலம் மாற மாற, பழைய பழக்கங்கள் மீண்டும் திரும்புகின்றன. இதற்கு கொரோனா காலமும் ஒரு காரணமாகி உள்ளது. இப்படி கொரோனா ஊரடங்கு காலத்தில், திரும்பியுள்ள ஒரு நல்ல பழக்கம், புத்தகம் வாசித்தல். வீட்டில் முடங்கி கிடந்த குழந்தைகளுக்கு, கதை மற்றும் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, அந்த பழக்கத்தை பெற்றோர் மீட்டெடுத்துள்ளனர். வாசிக்க தெரிந்தவர்களும்,
சென்னையில்பிரமாண்டமானபழைய புத்தகக்கடை

- நமது நிருபர்--
காலம் மாற மாற, பழைய பழக்கங்கள் மீண்டும் திரும்புகின்றன. இதற்கு கொரோனா காலமும் ஒரு காரணமாகி உள்ளது. இப்படி கொரோனா ஊரடங்கு காலத்தில், திரும்பியுள்ள ஒரு நல்ல பழக்கம், புத்தகம் வாசித்தல். வீட்டில் முடங்கி கிடந்த குழந்தைகளுக்கு, கதை மற்றும் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, அந்த பழக்கத்தை பெற்றோர் மீட்டெடுத்துள்ளனர். வாசிக்க தெரிந்தவர்களும், புத்தகங்களை அணுகினர்.சமீபத்திய ஆய்வு ஒன்றில், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, 12 வயது முதல் 22 வயதிற்கு உட்பட்டோர், புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுவதாக அந்த ஆய்வு தெரிவித்து உள்ளது. அரிய புத்தகங்கள் கூட எளிதாக கிடைக்கும் இடங்கள் தான், பழைய புத்தகக்கடைகள். இந்த கடைகள் அளவில் சிறிதாக இருக்கும். குவிந்து கிடக்கும் புத்தகங்கள், தேவையானவற்றை தேர்ந்தெடுப்பது ஒரு சாகசம் தான்.இதை மனதில் கொண்டு தான், மிக பிரமாண்டமாக பழைய புத்தகக்கடை ஒன்று உருவெடுத்துள்ளது.மேலும், ௪,௦௦௦ சதுர அடியில், தரைதளம், முதல்தளம் என, இருண்டு தளங்களிலும், அழகாக வரிசைக்கிரமமாக புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ளது. அந்த கடைக்குள் நுழைந்தால், பார்க்கும் இடங்கள் எல்லாம் புத்தகங்கள். சென்னை, முகலிவாக்கம், ஆறுமுகம் நகர் முதல் பிரதான சாலையில், இந்த புத்தக விற்பனையகம் இயங்கி வருகிறது. கடையின் பெயர், 'யூஸ்டு புக் பேக்டரி!'பல்வேறு நாடுகளிலும் வெளியான புத்தகங்கள் கூட இங்கு கிடைக்கின்றன. அதுவும், ௮௦ சதவீத தள்ளுபடி விலையில்.இங்கு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், வாசகர்களை வரவேற்க காத்திருக்கின்றன.சிறார்கள், பருவ வயதினர், ஆய்வாளர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கலை ரசனை கொண்டவர்கள், நாவல் விரும்பிகள், சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் முதியவர் என, சகலமானவர்களும் விரும்பும் வகையிலான ஏராளமான புத்தகங்கள், இங்கே கொட்டிக் கிடக்கின்றன.பெரும்பாலும், ஏற்கனவே வாசிக்கப்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், குறைந்தபட்சம், 50 சதவீதம் முதல் அதிகபட்சம் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கப்படுகின்றன. இந்த புத்தக 'பேக்டரி' உருவாகியது குறித்து அதன் உரிமையாளர் தீபக் கூறியதாவது:நான் இன்ஜினியரிங் படிக்கும் போது, புத்தகங்கள் வாங்க பல இடங்களுக்கு அலைந்துள்ளேன். இதனால் அப்போதே, அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்ற திட்டம் தோன்றியது.அதே நேரம், அனைத்து தரப்பினரும் வாங்கிப் படிக்கும் விலையில் விற்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், வீட்டில் ஒரு 'ஷெல்ப்'பில் ஆரம்பித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஐந்து ஆண்டுகள் பார்த்த வேலையை விட்டு, புத்தக 'பேக்டரி'யை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன். அது தற்போது விருட்சமாக வளர்ந்துள்ளது.என்னிடம், பல்வேறு நாடுகளில் பதிக்கப்பட்ட புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளன. இவற்றை இந்திய அளவில், 'ஆன்-லைன்' வாயிலாகவும் விற்பனை செய்கிறேன். புத்தக 'டெலிவரி'க்காக, 'கூரியர்' நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்துள்ளேன்.தற்போது, ஆங்கில புத்தகங்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறேன். வரும் காலங்களில், மாநில மொழி புத்தகங்களையும் விற்பனை செய்ய உள்ளேன்.பல தரப்பினர் எனக்கு, நன்கொடையாக புத்தகங்களை அளிக்கின்றனர். அவற்றை சேகரித்து, ஆதரவற்ற சிறார்கள் இல்லத்தில் கொடுப்பதையும் ஒரு கடமையாக செய்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.புத்தகங்கள் வாங்க விரும்புவோர், 77804 54974 என்ற எண்ணில், காலை 9:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X