24வது மாடியிலிருந்து குதித்துசிறுசேரி பெண் தற்கொலை

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
திருப்போரூர், :சிறுசேரி அடுக்குமாடி குடியிருப்பின் 24வது மாடியில் இருந்து குதித்து, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.செங்கல்பட்டு மாவட்டம், ஓ.எம்.ஆர்., சாலை சிறுசேரியில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் ஜெனிபர், 35. இங்குள்ள 24வது மாடியிலிருந்து குதித்து, நேற்று தற்கொலை செய்தார்.கேளம்பாக்கம் ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார், ஜெனிபர் உடலை மீட்டு பிரேத

திருப்போரூர், :சிறுசேரி அடுக்குமாடி குடியிருப்பின் 24வது மாடியில் இருந்து குதித்து, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.செங்கல்பட்டு மாவட்டம், ஓ.எம்.ஆர்., சாலை சிறுசேரியில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் ஜெனிபர், 35. இங்குள்ள 24வது மாடியிலிருந்து குதித்து, நேற்று தற்கொலை செய்தார்.கேளம்பாக்கம் ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார், ஜெனிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஜெனிபரின் தாயிடம் விசாரணை மேற்கொண்ட பின், கேளம்பாக்கம் போலீசார் கூறியதாவது:ஜெனிபருக்கு 35 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், தினமும் இரவு துாக்கம் வராமல் சிரமப்பட்டுள்ளார். தாழம்பூரில் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜெனிபரை, மூன்று நாட்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர்.இதனால் மேலும் மன உளைச்சலாகி, 24வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X