திருவேற்காடு :திருவேற்காடு பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியின் பெற்றோர், தன் மகளை காணவில்லை என, கடந்த வாரம் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின்படி, திருவேற்காடு போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதில், ஆவடியை சேர்ந்த சஞ்சய்குமார், 19, என்பவர் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, திருச்சியில் தங்கி இருப்பது தெரிந்தது. திருவேற்காடு போலீசார் திருச்சி சென்று சிறுமியை மீட்டு, அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சஞ்சய்குமாரை நேற்று 'போக்சோ'வில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.