10 வினாடியில் இருவருக்கு ரயில் டிக்கெட்'சுறுசுறு' அன்பழகனுக்கு குவியுது பாராட்டு

Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
எழும்பூர் ரயில் நிலைய பணியாளர் ஒருவர், 10 வினாடிகளில் இருவருக்கு டிக்கெட் வழங்கி, 'சுறுசுறு'ப்பில் அசத்தி வருகிறார்.ரயில் டிக்கெட் எடுக்க, பயணியர் வரிசையில் காத்திருப்பது வாடிக்கை. கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் அலுவலக நேரங்களில், டிக்கெட் வாங்கி பயணிப்பது சவாலான விஷயம்.இந்த கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், பல்வேறு ரயில் நிலையங்களில் தானியங்கி 'டிக்கெட்
10 வினாடியில் இருவருக்கு ரயில் டிக்கெட்'சுறுசுறு' அன்பழகனுக்கு குவியுது பாராட்டு


எழும்பூர் ரயில் நிலைய பணியாளர் ஒருவர், 10 வினாடிகளில் இருவருக்கு டிக்கெட் வழங்கி, 'சுறுசுறு'ப்பில் அசத்தி வருகிறார்.

ரயில் டிக்கெட் எடுக்க, பயணியர் வரிசையில் காத்திருப்பது வாடிக்கை. கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் அலுவலக நேரங்களில், டிக்கெட் வாங்கி பயணிப்பது சவாலான விஷயம்.இந்த கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், பல்வேறு ரயில் நிலையங்களில் தானியங்கி 'டிக்கெட் மிஷின்'கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மிஷின்கள் வாயிலாக டிக்கெட் வழங்க, சில இடங்களில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட் கவுன்டர் பகுதியில், தானியங்கி 'டிக்கெட் மிஷின்' உள்ளது. இந்த மிஷின் வாயிலாக, ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளரான அன்பழகன், ௬௭, என்பவர், டிக்கெட் வினியோகம் செய்து வருகிறார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் சுறுசுறுப்பாக, தன் கை விரல் ஜாலத்தால், பயணியர் கேட்கும் இடங்களுக்கு டிக்கெட் எடுத்து தருகிறார்.பயணியரிடம் இன்முகத்தோடு பேசும் இவர், சில வினாடிகளில் டிக்கெட் வழங்குவது, 'மேஜிக்' செய்வது போல் உள்ளது. 10 வினாடிகளில் இரண்டு பேருக்கு டிக்கெட் வழங்குகிறார். இந்த வேகத்தால், பெரிய வரிசையாக இருந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் காணாமல் போய் விடுகிறது.இவரின் சுறுசுறுப்பான பணியை, பயணி ஒருவர் வீடியோ எடுத்து, தன்னுடைய 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டார். இதைப் பார்த்த பலர், அன்பழகனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அத்துடன், அவருடனான தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raj82 - chennai,இந்தியா
05-ஜூலை-202215:41:37 IST Report Abuse
raj82 குறிப்பு : இவர் இதை இந்து வருடங்களாக saidu வருகிறார்
Rate this:
Cancel
Visu - chennai,இந்தியா
04-ஜூலை-202200:36:51 IST Report Abuse
Visu மகிழ்ச்சி அதே நேரம் இவர் ஒரு ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் நிச்சியம் பென்ஷன் வரும் எனவே இந்த பணியை ஒரு வேலையில்லா பட்டதாரியிடம் ஒப்படைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
09-ஜூலை-202207:15:36 IST Report Abuse
RaajaRaja Cholanஇவனுங்களுக்கு இதே வேலை , அடுத்தவன் என்ன செய்யணும் என்று இவனுங்க யோசனை சொல்றது , கேடு கேட்ட கூட்டம் , அடுத்தவனுக்கு பென்ஷன் வந்தா என்ன வரலைன்னா என்ன , என்னவோ இவரு தான் தகுதியான ஒரு நபரின் வேலையை கெடுத்தது போல ....
Rate this:
Cancel
lana -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜூலை-202213:45:10 IST Report Abuse
lana வாழ்த்துக்கள். வயது வெறும் no என்பது உங்களுக்கு பொருந்தும். வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X