புல்பிரைட் விருது பெற்றுபெருமை சேர்த்த தமிழக மாணவி| Dinamalar

'புல்பிரைட்' விருது பெற்றுபெருமை சேர்த்த தமிழக மாணவி

Added : ஜூலை 02, 2022 | |
பிரெஞ்சு, பாலினேசியா தீவுகளில் சுற்றுச்சூழல் கள ஆய்விற்காக, தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஆர்த்தி கண்ணனுக்கு, 'புல்பிரைட்' விருது வழங்கப்பட்டு உள்ளது.சென்னை, நங்கநல்லுாரைச் சேர்ந்தவர் கண்ணன் ஸ்ரீனிவாசன். இவரது மகள் ஆர்த்தி கண்ணன், 25. சென்னை, லாலாஜி மெமோரியல் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளியில் படித்தவர்.நம் நாட்டில் பள்ளிப் படிப்பு முடித்து, உயிரியலில் இளங்கலைப்
'புல்பிரைட்' விருது பெற்றுபெருமை சேர்த்த தமிழக மாணவி

பிரெஞ்சு, பாலினேசியா தீவுகளில் சுற்றுச்சூழல் கள ஆய்விற்காக, தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஆர்த்தி கண்ணனுக்கு, 'புல்பிரைட்' விருது வழங்கப்பட்டு உள்ளது.சென்னை, நங்கநல்லுாரைச் சேர்ந்தவர் கண்ணன் ஸ்ரீனிவாசன். இவரது மகள் ஆர்த்தி கண்ணன், 25. சென்னை, லாலாஜி மெமோரியல் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளியில் படித்தவர்.நம் நாட்டில் பள்ளிப் படிப்பு முடித்து, உயிரியலில் இளங்கலைப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.தற்போது, அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில், 'ஸ்கூல் ஆப் என்விரான்மென்டல் மாஸ்டர்ஸ்' பட்டம் படித்து வருகிறார்.உலகின் மிகப்பெரிய, மிகவும் மாறுபட்ட சர்வதேச கல்வி பரிமாற்ற திட்டமான, 'புல்பிரைட்' விருது, அமெரிக்க மக்களுக்கும், மற்ற நாட்டு மக்களுக்கும் இடையே பரஸ்பர புரிதலை அதிகரிப்பதற்காக வழங்கப்படுகிறது.இந்த விருதுக்கு, ஆர்த்தி கண்ணன் விண்ணப்பித்திருந்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 121 மாணவ - மாணவியர் இந்த விருதுக்கு விண்ணப்பித்தனர். கடும் போட்டியில், 22 பேரில் ஒருவராக இடம் பெற்று, பின் விருதையும் பெற்றுள்ளார்.பிரெஞ்சு பாலினேசியாவில் கள ஆய்வுக்கான, 'புல்பிரைட்' விருதைப் பெற்ற, தமிழகத்தை சேர்ந்த முதல் மாணவி இவர். பிரெஞ்சு பாலினேசியாவின் டெட்டியாரோவா அட்டோலில், புகழ் பெற்ற சுறா விஞ்ஞானிகளான, வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் விர்சிங், பிரெஞ்சு ஆராய்ச்சி மைய டாக்டர் எரிக் க்ளூவா உள்ளிட்டோருடன் இணைந்து, ஆர்த்தி விரைவில் பணியாற்ற உள்ளார்.'ரீப்' சுறாக்கள் போன்ற வேட்டை விலங்குகள், கடல் சுற்றுச்சூழலின் கீழ்த்தட்டு விலங்குகளான ரேவகை மீன்கள் மீது கொண்டுள்ள தாக்கம் பற்றியும், அந்த விலங்குகள், பிரபலமாகி வரும் 'ஷார்க் -டைவிங்' சுற்றுலா செயல்பாடுகளால் எவ்வாறு பாதிப்படைகின்றன என்பதைப் பற்றியும் ஆய்வு செய்ய உள்ளார்.இவரது தாத்தா, புகழ் பெற்ற கணிதக் கல்வியாளர் ஸ்ரீனிவாசன், 1965ல் ஆசிரியர்களுக்கான 'புல்பிரைட்' விருது பெற்ற கணிதவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தான், கணிதமேதை ராமானுஜனின் முதல் வாழ்க்கை வரலாற்றாசிரியர்.விருது பெற்ற ஆர்த்தி கண்ணன் கூறியதாவது:இந்த விருது, என்னை வன விலங்கு மற்றும் கடல் அறிவியலில் 'டாக்டரேட்' படிப்பை நோக்கி கொண்டு செல்லும்.சுற்றுச்சூழல் அறிவியல் கல்வியை வருங்கால சந்ததியினர் அணுகக் கூடியதாக மாற்றவும்; வன விலங்குகளுக்கான காலநிலை மாற்றம் உள்ளிட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளை உருவாக்கவும், என் வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன்.இந்தியாவில், அழிந்து வரும் கடல் மற்றும் நிலப்பரப்பு உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் இந்திய சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளுக்கும் உதவ நான் விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர்- -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X