மஹாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மும்பை திரும்பினர்

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கோவாவிலிருந்து இன்று மும்பை வந்திறங்கினர். மஹாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசில் அங்கம் வகித்த பொதுப் பணித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முதல்வராக இருந்த உத்தவிற்கு எதிராக போர்க்கெடி தூக்கினர். இந்நிலையில், உத்தவ் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதால், சட்டசபையை கூட்டி
மஹாராஷ்டிரா , அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மும்பை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மஹாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கோவாவிலிருந்து இன்று மும்பை வந்திறங்கினர்.

மஹாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசில் அங்கம் வகித்த பொதுப் பணித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முதல்வராக இருந்த உத்தவிற்கு எதிராக போர்க்கெடி தூக்கினர்.

இந்நிலையில், உத்தவ் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதால், சட்டசபையை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என, மாநில கவர்னர் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதற்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டதுஉத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.


latest tamil news



தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 40 பேர் மற்றும் பா.ஜ. ஆதரவுடன் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். துணை முதல்வர் பா.ஜ.வின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றார். இதற்கிடையே சட்டசபையை கூட்டணி பெரும்பான்மை நிருபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து கோவா வில் தங்கியிருந்த சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்., கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை வந்திறங்கினர்.அவர்களை வரவேற்றார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X