பாவக்குடம் நிரம்பிய சித்துபா.ஜ., கடும் விமர்சனம்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
பெங்களூரு-''அந்த தருமர் பின்னாலேயே, யாரும் வரவில்லை. அதர்மமானவரான உங்கள் (சித்தராமையா) பின்னால், யார் வருவார்கள். உங்களின் உற்சவம், நான்கு நாற்காலிகளை வேண்டுமானால் நிரப்பலாம். நான்கு தொகுதிகளை பெற்றுத்தராது,'' என பா.ஜ., சாடியது.இது குறித்து, டுவிட்டரில் பா.ஜ., கூறியதாவது:சாமுண்டீஸ்வரியில், சாமுண்டி தேவி கைப்பிடிக்கவில்லை. பாதாமியிலும் பனசங்கரியின் சாபம்

பெங்களூரு-''அந்த தருமர் பின்னாலேயே, யாரும் வரவில்லை. அதர்மமானவரான உங்கள் (சித்தராமையா) பின்னால், யார் வருவார்கள். உங்களின் உற்சவம், நான்கு நாற்காலிகளை வேண்டுமானால் நிரப்பலாம். நான்கு தொகுதிகளை பெற்றுத்தராது,'' என பா.ஜ., சாடியது.இது குறித்து, டுவிட்டரில் பா.ஜ., கூறியதாவது:சாமுண்டீஸ்வரியில், சாமுண்டி தேவி கைப்பிடிக்கவில்லை. பாதாமியிலும் பனசங்கரியின் சாபம் உங்களுக்குள்ளது. சவதத்தி எல்லம்மாவாலும், காப்பாற்ற முடியாது. சித்தராமையாவின் பாவக்குடம் நிறைந்துள்ளது.அந்த தருமர் பின்னாலேயே, யாரும் வரவில்லை. அதர்மமானவரான உங்கள் (சித்தராமையா) பின்னால், யார் வருவர். உங்களின் உற்சவம், நான்கு நாற்காலிகளை வேண்டுமானால் நிரப்பலாம். நான்கு தொகுதிகளை பெற்றுத்தராது.காங்கிரசின் மூத்த தலைவர்கள், உங்களால் கட்சியை விட்டு செல்வது உண்மைதானே. சித்தராமோற்சவம் நடத்தப்பட்ட பின், காங்கிரஸ் மேலும் காலியாகும். காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவை உருவாக்க, அவர் அஸ்திவாரம் போட்டுள்ளார். முதல்வர் வேட்பாளர் என, சித்தராமையா பெயரை அறிவிக்காவிட்டால், ஆறு கட்சியை விட்டு வந்துள்ள இவர், ஏழாவது முறை கட்சி தாவுவது கஷ்டமா.செல்வாக்கு, பிரசாரத்துக்காக அவர் செய்த எந்த பணியும், இப்போது உதவிக்கு வரவில்லை. இதைவிட வெட்கக்கேடு வேறொன்று உள்ளதா. தானே அடுத்த முதல்வர் என சித்தரிக்க, தன்னுடையதேயான பட்டாளத்துடன் சேர்ந்து, உற்சவம் நடத்திக்கொண்டால், அது தன் சக்தியை காண்பித்தது போன்றாகாது.தைரியம் இருந்தால், சிவகுமாரை எதிர்த்து நில்லுங்கள். அஸ்திவாரம் இல்லாமல், மாடி வீடு கட்ட, அவர் முற்பட்டுள்ளார். மாநில முதல்வராக இருந்தவருக்கு, அடுத்த தேர்தலில் போட்டியிட, தொகுதி கிடைக்காத சூழ்நிலை, எந்த தலைவருக்கும் வரக்கூடாது. உங்களை பற்றி அனுதாபப்படுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X