வக்கிரம் பிடித்து பேசிய ராஜண்ணா‛; 'மாஜி' முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
பெங்களூரு-''முன்னாள் பிரதமர் தேவகவுடா குறித்து, வக்கிரமான மனநிலையில் பேசிய ராஜண்ணாவுக்கு, தக்க பாடம் புகட்டுவேன்,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:தேவகவுடா பற்றி, ராஜண்ணா வக்கிரம் பிடித்த மனநிலையில் பேசியுள்ளார். தன் ஈனத்தனமான கலாசாரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அகங்காரம் பிடித்து பேசிய அவருக்கு, தகுந்த

பெங்களூரு-''முன்னாள் பிரதமர் தேவகவுடா குறித்து, வக்கிரமான மனநிலையில் பேசிய ராஜண்ணாவுக்கு, தக்க பாடம் புகட்டுவேன்,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:தேவகவுடா பற்றி, ராஜண்ணா வக்கிரம் பிடித்த மனநிலையில் பேசியுள்ளார். தன் ஈனத்தனமான கலாசாரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அகங்காரம் பிடித்து பேசிய அவருக்கு, தகுந்த பாடம் புகட்டுவோம்.2004ல் ராஜண்ணா, மதுகிரி சட்டசபை தொகுதியில் ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தலின் இறுதி நாள், தேவகவுடா பிரசாரம் செய்தார். இதனால் ராஜண்ணாவால், விதான்சவுதா படிகளில் ஏற முடிந்தது. இல்லையென்றால் இவரை, யார் சீண்டப்போகின்றனர்.தேவகவுடா, தன் ஆரோக்கியத்தை பொருட்படுத்தாமல், தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்தார். இருவர் தேவகவுடாவுக்கு தோள் கொடுத்து தாங்கிப்பிடிப்பது உண்மைதான். கோவில் வளாகத்தில் கடவுள் ஊர்வலத்துக்கும், தோள் கொடுக்கிறோம். கடவுளுக்கு தோள் கொடுப்பதில்லையா. எங்களை பொருத்த வரை, அவரும் கடவுள்தான்.ராஜண்ணாவின் அகங்காரமான பேச்சை, நானும் கவனித்தேன். அவர் பிரம்மன் அல்ல. அவரும் ஒரு சாதாரண மனிதன்தான். தேவகவுடா 100 வயதை தாண்டி, நலமுடன் வாழ்வார் என்ற நம்பிக்கை உள்ளது. பலரின் நெருக்கடிகளால், துமகூரில் தேவகவுடாவை தேர்தலில் களமிறக்கி தோற்கடித்தனர். அவரை தோற்கடிக்க, தந்திரம் செய்தது இதே ராஜண்ணாதான்.இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் பார்க்கட்டும். தேவகவுடா யாருடைய உதவியுமின்றி, சுதந்திரமாக நடமாடுவார். தேவகவுடாவை பற்றி, வக்கிரமாக பேசியவரிடம் மன்னிப்பு கேட்கும்படி, நான் கூறவில்லை. தேவகவுடாவின் மகனான நான், இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன். மதுகிரிக்கு வந்து காண்பிக்கிறேன். நான் பதிலளிக்கமாட்டேன். மக்கள் மூலமாகவே பதிலளிக்க வைப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X