நடிகைக்கு திடீர் குழப்பம்
நடிகை மேக்னா ராம், பத்மாவதி என்ற படத்தில், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுபற்றி அவரது வாயை கிளறிய போது, சிறு வயது முதல் மூதாட்டி வரையிலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இது சவாலாகத்தான் இருந்தது. படத்தின் ஆடியோ, சமீபத்தில் வெளியிடப்பட்டது. படத்துணுக்கை பார்க்கும் போது, இன்னும் நன்றாக வந்திருக்கலாம் என தோன்றுகிறது. கலைஞர்கள் வளரும் போது, இது போன்ற குழப்பம் இருக்கும் என நினைக்கிறேன். ஜூலை 15ல் படம் திரைக்கு வருகிறது' என்றார்.வரிசை கட்டும் படங்கள்சமீப ஆண்டுகளில், எந்த நடிகையும் திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்தில், அதிக எண்ணிக்கையில் படங்களில் நடித்த உதாரணங்கள் இல்லை. ஆனால் நடிகை யஷா சிவகுமார், எட்டு படங்களில் நடித்து வருகிறார். பைராகி திரைக்கு வருகிறது. ஏழு படங்கள் திரைக்கு வர வரிசையில் நிற்கின்றன. இது குறித்து அவர் கூறுகையில், 'அனைத்து தரப்பு மக்களை சென்றடையும் வகையிலான கதை, கதாபாத்திரங்களில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என் முதல் படம் திரைக்கு வருவதால், படபடப்பாக உணர்கிறேன்,' என்றார்.புதிய பெண் தயாரிப்பாளர்கன்னட திரையுலகில், பெண் தயாரிப்பாளர் எண்ணிகை குறைவு என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆண்டு தோறும் நுாற்றுக்கணக்கான திரைப்படங்கள் திரைக்கு வந்தாலும், பெண் தயாரிப்பாளர்கள் சிலர் மட்டுமே. தற்போது பெண் தயாரிப்பாளர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளவர் வர்ஷா சஞ்சீவ். இவர் தயாரிக்கும் முதல் படம் ஹோப் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இந்த அனுபவம் பற்றி, அவரிடம் கேட்ட போது, 'ஆரம்பத்திலிருந்தே எனக்கு, படத்தயாரிப்பில் ஆர்வம் இருந்தது. எனக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து, ஒரு கதையை எழுதி தயாரித்தேன்' என்றார்.ஏழைகளுக்கு உதவ விருப்பம்கொரோனா காரணமாக, நடிகர் கணேஷ் இரண்டு ஆண்டுகளாக, பிறந்த நாளை கொண்டாடவில்லை. நேற்று அவரது பிறந்த நாளாகும். இம்முறையும் தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என, முடிவு செய்துள்ளார். இது ரசிகர்களுக்கு வருத்தமளித்துள்ளது. இது பற்றி ரசிகர்களுக்கு எழுதிய கடிதத்தில், 'என் கலை வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், என்னுடன் நடைபோட்டு, என் வெற்றியை உங்கள் வெற்றியாக கருதுகிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இம்முறை நான் பிறந்த நாள் கொண்டாடவில்லை. என் பிறந்த நாளை கேக் வெட்டி, ஆடம்பரமாக கொண்டாடாதீர்கள். அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவுங்கள்' என கணேஷ் கோரியுள்ளார்.வெளிநாட்டில் படப்பிடிப்புசாண்டல்வுட்டில் நடிகர் தர்ஷனின் படங்கள் அனைத்துமே, வெற்றி வாகை சூடியவை. வசூலை அள்ளியது. ராபர்ட், குருசேத்ரா, எஜமானா போன்ற படங்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தன. தற்போது இவரது நடிப்பில், கிராந்தி படப்பிடிப்பு நடக்கிறது. இறுதி கட்ட படப்பிடிப்புக்காக, படக்குழுவினர் போலந்துக்கு பறந்துள்ளனர். தர்ஷன், ரசிதா ராம், தயாரிப்பாளர் சைலஜா நாக், அவரது மகள் தனியார் விமானத்தில் சென்றுள்ளனர். இங்கு தர்ஷன், ரசிதா ராமின் டூயட் பாடல் படமாக்கப்படுகிறதாம். தர்ஷன் படங்களில், ஏதாவது ஒரு பாடல் வெளிநாட்டில் படமாக்கப்படும்.கவர்ச்சிகரமான போட்டோ ஷூட்கன்னட திரையுலகின், ஸ்டார் நடிகைகளில் முக்கியமானவர் ஆஷிகா ரங்கநாத். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களோ, கிளாமரான போல்டு கதாபாத்திரங்களோ எதுவாக இருந்தாலும், ஒரு கை பார்ப்பார். அவரது நடிப்பில் திரைக்கு வந்த அவதார புருஷா சூப்பர் ஹிட்டாக ஓடுகிறது. இதற்கிடையில் சில நாட்கள், ஓய்வில் உள்ள அவர், நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரையில், கவர்ச்சிகரமாக போட்டோ ஷூட் நடத்தி, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள், சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவியுள்ளது. நடனமாடி வீடியோவும் கூட வெளியிட்டுள்ளார்.இயக்கியது ஏன்?ஆண்களுக்கு நிகராக, பெண்களும் கூட திரையுலகில் சாதிக்கின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளினி, மாடலிங், நடிப்பு, டாக்குமென்டரி படங்கள் தயாரிப்பு என, பல்வேறு பரிமாணங்களில் ஜொலிப்பவர் ஷீத்தல் ஷெட்டி. தற்போது இவர் இயக்கிய விண்டோ சீட' திரைக்கு வந்துள்ளது. இதுபற்றி அவரிடம் கேட்ட போது, 'ஒவ்வொரு மனிதருக்குள்ளும், கதை இருக்கும். அதை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் அதை வெளியே கொண்டு வர வேண்டுமென்ற துடிப்பு இருக்கும். எனக்குள்ளும் நல்ல கதை இருந்தது. அது என்னை பட இயக்கம் வரை அழைத்து வந்துள்ளது. இது கற்பனை கதை. படப்பிடிப்பு அனுபவம் அற்புதமாக இருந்தது' என்றார்.